தொடரும் விபரீதம்.. செல்பி எடுக்க குளச்சல் கடலின் பாறைமேல் நின்ற இளைஞர் அலையில் சிக்கி மாயம்!
செல்பி எடுக்க பாறைமேல் நின்ற இளைஞர் அலையில் சிக்கி மாயமானார்.
Recommended Video

கன்னியாகுமரி: குளச்சலில் கடலின் பாறை மீது ஏறி நின்று செல்பி எடுக்க முயன்ற வட மாநில இளைஞர் ராட்சத அலையில் சிக்கி மாயமானார். இதையடுத்து கடலோர போலீசார் மற்றும் மீனவர்கள் இளைஞரை படகுகள் மூலம் தீவிரமாக தேடி வருகின்றனர்.
குளச்சலில் உள்ள போர் வெற்றித்தூண் அருகே மீன்பிடி துறைமுகம் பகுதியில் கடல் நடுவே அமைந்துள்ள பகுதிகள் புனித அலெக்ஸ் பாறை உள்ளிட்டவை. இதனை கண்டுகளிக்க உள்ளூர் மட்டுமில்லாமல் வெளி மாவட்ட சுற்றுலா பயணிகளும் அதிக அளவில் வந்து செல்கின்றனர். இங்கு வரும் சுற்றுலா பயணிகள் ஆபத்தான பகுதிகளில் நின்று செல்பி எடுத்தும் வருகின்றனர். இதில் அடிக்கடி உயிரிழப்புகளும் ஏற்பட்டு வருகின்றன.

இந்நிலையில் கடந்த இரு தினங்களாக விடுமுறை தினம் என்பதால் குளச்சல் கடற்கரையில் கூட்டம் வழிந்து நிறைந்தது. நேற்று அழகியமண்டபம் பகுதியில் உள்ள மர அறுவை ஆலையில் தங்கி வேலை பார்க்கும் கொல்கத்தாவை சேர்ந்த ஆசிக் மாலிக்,என்பவர் குளச்சலுக்கு தனது நண்பர்கள் 5 பேருடன் வந்தார். நண்பர்கள் அனைவரும் அவருடன் தங்கி வேலைபார்க்கும் உ.பியை சேர்ந்தவர்கள் என கூறப்படுகிறது. இவர்கள் கடற்கரை பகுதிகளை சுற்றிபார்த்து செல்பி எடுத்து மகிழ்ச்சியாக இருந்துள்ளனர்.
கடைசியாக புனித அலெக்ஸ் பாறை மீதுஏறி நின்று அவர்கள் செல்பி எடுத்து கொண்டிருந்தனர். அப்போது ஆசிக் மாலிக் செல்பி எடுக்க முயன்றபோது, திடீரென்று எழுந்த ராட்சத அலை ஒன்று, அவரை இழுத்து சென்றது. நடுக்கடலில் இளைஞர் ஆசிக் மாலிக் தத்தளித்தார். அவரை காப்பாற்ற சக நண்பர்கள் கூச்சலிட்டனர். ஆயினும் மீட்க மீனவர்கள் விரைந்து வருவதற்குள் ஆசிக்மாலிக் கடலில் மூழ்கி மாயமானார். தகவலறிந்து வந்த கடலோர போலீசார் உள்ளூர் மீனவர்கள் உதவியுடன் படகு மூலம் மாயமான இளைஞரை தேடி வருகின்றனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications