மதுரை: மேம்பாலத்தில் இருந்து குதித்த வட மாநில இளைஞர் சாவு
மதுரை: மதுரையில் ரயில்வே மேம்பாலத்தில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட வட மாநில இளைஞர் உயிரிழந்தார்.
மதுரை பெரியார் பேருந்து நிலையம் அருகே உள்ளது எல்லீஸ் நகர் ரயில்வே மேம்பாலம். இந்த பாலத்தின் வளைவு மீது இன்று மாலை ஏறி நின்ற வட மாநில இளைஞர் ஒருவர் தற்கொலை செய்து கொள்ளப்போவதாக மிரட்டல் விடுத்துள்ளார்.

இதையடுத்து அந்த வழியாக சென்ற பொதுமக்கள் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் அந்த இளைஞரை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இந்நிலையில் திடீரென அவர் கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டார்.
தீயணைப்பு துறையினரும் பொது மக்களும் இணைந்து இளைஞரை காப்பாற்ற சுமார் ஒன்றரை மணி நேரமாக மேற்கொண்ட முயற்சி பலன் வீண் போனது. மேம்பாலத்தில் இருந்து குதித்த போது, மின்சார ரயிலுக்கான உயர் அழுத்த மின்கம்பியில் விழுந்ததால் வடமாநில இளைஞர் உயிரிழந்தார்.
இதன் பின்னர் உயிரிழந்த வடமாநில இளைஞரின் உடலை மதுரை அரசு இராஜாஜி மருத்துவ மனைக்கு பிரேத பரிசோதனைக்காக எடுத்து சென்றனர். இருப்பினும் அந்த இளைஞர் யார்? எங்கு வேலை பார்க்கிறார் என்ற விவரம் தெரியவில்லை.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications