வட தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் மழை அடித்து வெளுக்குமாம்.. வானிலை மையம் ஜில் ஜில் அறிவிப்பு!
வட தமிழகத்தில் அடுத்த 24 மணிநேரத்தில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
Recommended Video

சென்னை: வட தமிழகத்தில் அடுத்த 24 மணிநேரத்தில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தின் பல்வேறு இடங்களில் நேற்று பரவலாக நல்ல மழை பெய்தது. சென்னையில் விடிய விடிய பெய்த மழையால் சாலைகளில் மழை நீர் குளம் போல் தேங்கியுள்ளது.
மழையை தொடர்ந்து சென்னை முழுவதும் மேகமூட்டத்துடன் காணப்படுகிறது. இதனால் பல இடங்களில் குளிர் காற்றுடன் இதமான சூழல் நிலவி வருகிறது.

மிதமான மழை
இந்நிலையில் சென்னை வானிலை மைய இயக்குநர் பாலச்சந்திரன் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது, தமிழகம், புதுச்சேரியில் பல்வேறு இடங்களில் மிதமான மழை பெய்யும்.

வட தமிழகத்தில் கனமழை
தமிழக பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக மழை பெய்யும் வாய்ப்புள்ளது. வட தமிழகத்தில் அடுத்த 24 மணிநேரத்தில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

சென்னையில் மழை
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை அல்லது இரவு நேரங்களில் ஓரிரு முறை மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் அதிகளவாக சிதம்பரம் மற்றும் விழுப்புரத்தில் தலா 9 சென்டி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.

தமிழகத்தில் குறைவு
ஜூன் முதல் செப்டம்பர் வரையிலான தென்மேற்கு பருவமழை காலத்தில் 3ம் கட்டம் நிறைவு பெற்ற நிலையில் ஜூன் 1 முதல் ஆகஸ்ட் 31 வரை தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 179 மி.மீ மழை பதிவாகியுள்ளது. இயல்பான அளவு 204 மி.மீ ஆகும்.

50% குறைவு
மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் அமைந்துள்ள தேனி, திண்டுக்கல், நெல்லை, கோவை மாவட்டங்களில் இயல்பை விட அதிகளவு மழை பதிவாகியுள்ளது. கிருஷ்ணகிரி, தர்மபுரி, பெரம்பலூர் மாவட்டங்களில் இயல்பை விட 50 சதவீத மழை குறைவாக பதிவாகியுள்ளது. இவ்வாறு சென்னை வானிலை மைய இயக்குநர் பாலச்சந்திரன் செய்தியாளர்களுக்கு தெரிவித்துள்ளார்.
-
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பொதுமக்களே உஷார்! இன்று 22 மாவட்டங்களில் வெளுக்கப்போகும் கனமழை.. மஞ்சள் அலர்ட் கொடுத்த வானிலை மையம் -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
வெளுத்து வாங்கப் போகும் கனமழை! இரவோடு இரவாக 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! வானிலை மையம் எச்சரிக்கை -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications