புத்தாண்டில் மழை குறித்து நல்ல வார்த்தை சொன்ன வானிலை ஆய்வு மையம்
சென்னை: வடகிழக்கு பருவமழை 10 நாட்கள் நீடிக்க வாய்ப்பு உள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வடகிழக்கு பருவமழை ஆண்டுதோறும் அக்டோபர் மாதம் துவங்கி டிசம்பர் மாதம் வரை நீடிக்கும். இந்த ஆண்டு பருவமழை பொய்த்துவிட்டது. இந்நிலையில் வடக்கிழக்கு பருவமழை காலம் நீடிக்க வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறுகையில்,
கடந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை ஜனவரி மாதம் 4ம் தேதியுடன் முடிந்தது. கடந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை போதிய அளவு பெய்யவில்லை.
தற்போது கன்னியாகுமரி கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வுநிலை நீடிக்கிறது. அது மேற்கு நோக்கி நகர்ந்து வருவதால் மழைக்கு வாய்ப்பு உள்ளது. அதனால் வடகிழக்கு பருவமழை காலம் இன்னும் முடியவில்லை.
கணிப்புகள் மற்றும் ஆய்வின்படி வடகிழக்கு பருவமழை மேலும் 10 நாட்கள் நீடிக்க வாய்ப்பு உள்ளது. இது குறித்த இறுதி ஆய்வு முடிவு ஒரு வாரத்தில் வெளியிடப்படும்.
இலங்கை அருகே உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை மேற்கு நோக்கி நகர்ந்து மாலத்தீவு அருகே நிலை கொண்டுள்ளது. இதனால் அடுத்த 24 மணிநேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் மழை பெய்யக்கூடும்.
தமிழகத்தின் தென் கடலோர மாவட்டங்களில் லேசான மழை பெய்யக்கூடும். வட மாவட்டங்களில் மழை பெய்யாது. சென்னையை பொறுத்த வரை வறண்ட வானிலையே நிலவும் என்றனர்.
-
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
இன்னும் 3 நாள் தான்.. வரப் போகுது தென்மேற்குப் பருவமழை! ஜில்ஜில் கிளைமேட்டுக்கு ரெடியாகுங்க மக்களே! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications