தஞ்சை, அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் தேர்தலில் தமாகா போட்டியிடாது: ஜி.கே. வாசன்
சென்னை: தஞ்சை, அரவக்குறிச்சித் தேர்தலில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி போட்டியிடாது என்று அதன் தலைவர் ஜி.கே. வாசன் தெரிவித்துள்ளார்.
தஞ்சாவூர், அரவக்குறிச்சி சட்டசபை தொகுதிகளுக்கு வரும் நவம்பர் 19ம் தேதி தேர்தல் நடைபெறும் என்றும் அதே நாளில் திருப்பரங்குன்றம் சட்டப்பேரவைத் தொகுதிக்கான இடைத்தேர்தலும் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

இந்தத் தேர்தலில் பங்கேற்பது குறித்து ஜி.கே. வாசன் கூறியதாவது:
தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு சட்டப் பேரவை இடைத் தேர்தல்களில் பங்கேற்பதில் நம்பிக்கை இல்லை. எனவே, நாங்கள் இடைத் தேர்தல்களில் போட்டியிடுவதும் இல்லை. இதற்கு காரணம், பொதுமக்களுக்கு இடைத் தேர்தல்களில் நம்பிக்கை இல்லை என்பதுதான்.
எனினும், தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்று நான் அதிகார பூர்வமாக சொல்ல முடியாது. மாநில அளவில் அனைத்து தலைமை நிர்வாகிகள், மாவட்ட நிர்வாகிகள் என அனைவரிடமும் ஆலோசனை செய்துவிட்டுத்தான் முடிவு எடுக்கப்படும் என்று வாசன் கூறியுள்ளார்.
தமிழகத்தில் கடந்த மே மாதம் 16ம் சட்டப்பேரவைக்கான பொதுத் தேர்தல் நடைபெற்றது. அப்போது அரவக்குறிச்சி மற்றும் தஞ்சாவூர் தொகுதிகளில் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா நடைபெற்றதாக புகார்கள் எழுந்தன.
இதனையடுத்து, அந்த 2 தொகுதிகளுக்கும் முதலில் தேர்தலை தள்ளி வைத்த தேர்தல் ஆணையம் பின்னர் எதிர்ப்பு வலுக்கவே தேர்தலையே ரத்து செய்தது குறிப்பிடத்தக்கது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications