ரூ.2,000 நோட்டுக்களை மாற்ற அவகாசம் போதாது! டிசம்பர் வரை டைம் வேணும்! கிளம்பிய கோரிக்கை குரல்கள்!
சென்னை: ரூ.2,000 நோட்டுக்களை மாற்ற செப்டம்பர் 30 வரை கொடுக்கப்பட்டுள்ள அவகாசம் போதாது என்றும், டிசம்பர் வரை கால நீட்டிப்பு தர வேண்டும் எனவும் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.
அதேபோல் வணிகர்களும்-பொதுமக்களும் வங்கிகளில் தினமும் 60,000 ரூபாய் வரை மாற்றிக்கொள்ள அனுமதி அளிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் முன் வைக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக விக்கிரமராஜா விடுத்துள்ள கோரிக்கையும் அதற்கான காரணமும் வருமாறு;

கடந்த 2016ம் ஆண்டு பழைய 1000, 500 ரூபாய் நோட்டுகளுக்கு பண மதிப்பிழப்பு அறிவிக்கப்பட்டவுடன், புதிய 2000 ரூபாய் நோட்டுகள் அறிமுகப்படுத்தப்பட்டது. அந்த சமயத்தில் பொது மக்களுக்கும், வணிகர்களுக்கும் மிகப்பெரும் இடையூறுகளையும், துயரங்களையும், இழப்புகளையும் ஏற்படுத்தியது என்பது அனைவரும் அனுபவபூர்வமாக உணர்ந்திருக்கிறார்கள்.
7 ஆண்டுகளுக்கு முன் புழக்கத்தில் விடப்பட்ட இந்த 2000 ரூபாய் நோட்டுகள், புழக்கத்தில் இருந்து நீக்கப்படுவதாக ரிசர்வ் வங்கி நேற்றைய தினம் திடீரென அறிவித்திருக்கின்றது. இது சாமானிய மக்களை மட்டுமன்றி சிறு, குறு, நடுத்தரவர்க்க வணிகர்களை பெருமளவு பாதிப்புக்கு உள்ளாக்கும் என்பதை மத்திய அரசும், ரிசர்வ் வங்கியும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
2000 ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் இருந்து நீக்கப்படுவதாக அறிவித்த உடனேயே, சேமிப்பாக வைத்திருக்கக்கூடிய எளிமையான மக்களிடம் இருந்து, வணிகர்களிடமே அன்றாட தேவைக்காக புழக்கத்திற்கு கொண்டு வரப்படும்.
இந்நிலையில் வணிகர்கள் அந்த நோட்டுக்களை வாங்க மறுக்கும் நிலை ஏற்படும். அதுபோன்ற நிலை ஏற்படும்போது பொது மக்களுக்கும்-வணிகர்களுக்கும் சர்ச்சைகள் ஏற்படும் நிலை உருவாகும்.
மேலும், சில்லரை வணிகர்களே 20,000 ரூபாய்க்கு மேல், வங்கிக்கு செலுத்த செல்லுகின்றபோது அதனை வங்கிகள் ஏற்குமா? என்ற கேள்விக்குறியும் எழுப்பப்படுகிறது. இவற்றிற்கெல்லாம் விடைகாணும் விதமாக, பொதுமக்களின் அன்றாட புழக்கத்திற்கும், வணிகர்களின் வங்கி பயன்பாட்டிற்கும், 2000 ரூபாய் நோட்டுக்களின் நிலையை மத்திய அரசும், ரிசர்வ் வங்கியும் தெளிவுபடுத்திட வேண்டும்.
ஏழை, எளிய, நடுத்தர மக்கள் தங்களிடம் வைத்துள்ள 2000 ரூபாய் நோட்டுக்களை வணிக புழக்கத்திற்கு கொண்டு வந்து, அதனை மாற்றிக் கொள்வதற்கான எளிய நடைமுறைகளை, உரிய கால அவகாசத்துடன் தற்போது அறிவித்துள்ள 2023 செப்டம்பர் 30 என்பதை-டிசம்பர் 31 வரை கால நீட்டிப்பு அளிக்க வேண்டும்.
அதேபோல் வணிகர்களும்-பொதுமக்களும் வங்கிகளில் தினமும் 60,000 ரூபாய் வரை மாற்றிக்கொள்ள அனுமதி அளித்து பொதுமக்களும் வணிகர்களும் பதற்றமின்றி 2000 ரூபாய் நோட்டுக்களை மாற்றிக்கொள்ளும் நிலையை உருவாக்கி மத்திய அரசுக்கு எந்தவித அவப் பெயரும் ஏற்படாதவண்ணம் விதிகளை உடனடியாக அறிவித்திடுமாறு, தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு பொதுமக்கள், உற்பத்தியாளர்கள், விநியோகஸ்தர்கள், வணிகர்கள் நலன் கருதி வேண்டுகிறது.
-
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications