ம.ந.கூ.வால் எங்களுக்கு ஒரு பாதிப்பும் இல்லை, அது ஒரு ஆல்பபெட் கலவையாக்கும்: கார்த்தி சிதம்பரம்
கோவை: மக்கள் நலக் கூட்டணியால் எங்களுக்கு ஒரு பாதிப்பும் கிடையாது. அந்த கூட்டணி ஆல்பபெட் கலவையாக உள்ளது என அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கோவையில் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
தமிழக மக்கள் மாற்றத்தை எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள். வரும் சட்டசபை தேர்தலில் திமுக-காங்கிரஸ் கூட்டணி அமோக வெற்றி பெறும். தேர்தலுக்கு இன்னும் நிறைய நாட்கள் இருப்பதால் தொகுதி பங்கீடு குறித்து கவலை இல்லை.

தொகுதி பங்கீடு குறித்து திமுகவுடன் பேச்சுவார்த்தை நடத்த காங்கிரஸ் சார்பில் 8 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. அந்த குழுவில் என் தந்தை இல்லாதது பற்றி கவலை இல்லை. அந்த குழுவில் உள்ள அனைவரும் எங்கள் நண்பர்கள்.
காங்கிரஸ் தலைவர்களுக்கு இடையே கருத்து வேறுபாடு எல்லாம் இல்லை. தேர்தல் என்று வந்துவிட்டால் தலைவர்கள் ஒன்றாக சேர்ந்து மக்களிடம் வாக்கு சேகரிப்பார்கள். அனைத்து கட்சிகளிலும் கோஷ்டி பூசல் இருப்பது இயல்பானது தான்.
மக்கள் நலக் கூட்டணியால் எங்களுக்கு ஒரு பாதிப்பும் கிடையாது. அந்த கூட்டணி ஆல்பபெட் கலவையாக உள்ளது. நான் வெளிநாடுகளில் சொத்துக்களை வாங்கி குவித்துள்ளதாக புகார் எழுந்துள்ளது. நான் வருமான வரி மற்றும் சொத்துக்களை பதிவு செய்யும் ஆவணங்களை சமர்பித்துள்ளேன் என்றார்.
-
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
CBSE: மொபைல்களில் ஸ்கேன் செய்யப்பட்ட விடைத்தாள்கள்! குற்றச்சாட்டுகளை அடுக்கும் ராகுல் காந்தி! -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு!












Click it and Unblock the Notifications