வாக்கு சதவீதத்தில் ம.ந.கூ. மகா மோசம்.. முதலிடத்தைப் பிடித்தது நோட்டா!
சென்னை: தமிழக சட்டசபை தேர்தலில் இதுவரை எண்ணப்பட்ட வாக்குகளின் சதவீத அடிப்படையில் மக்கள் நலக்கூட்டணியைவிட நோட்டாவுக்கு அதிக வாக்குகள் கிடைத்திருப்பது தெரிய வந்துள்ளது.
தமிழக சட்டசபை தேர்தலில் பதிவான வாக்குகள் தற்போது எண்ணப்பட்டு வருகின்றன. அதன்படி, அதிமுக 42 சதவீத வாக்குகளுடன் முன்னிலையில் உள்ளது. அதற்கு அடுத்த இடத்தில் திமுகவுக்கு 29 சதவீத வாக்குகள் கிடைத்துள்ளன. தேமுதிகவிற்கு 2.3 சதவீத வாக்குகள் மட்டுமே கிடைத்துள்ளது.

தேமுதிகவை விட பாமகவிற்கு அதிகளவு வாக்கு சதவீதம் கிடைத்துள்ளது. அதன் வாக்கு சதவீதம் 5.9 ஆகும். இதேபோல் பாஜகவிற்கு 2.1 சதவீதம் கிடைத்துள்ளது.
இந்தப் பட்டியலில் மக்கள் நலக்கூட்டணி கட்சிகளான விடுதலைச் சிறுத்தைகளுக்கு 0.8 சதவீதமும், சிபிஎம்- 0.7 சதவீதமும், மதிமுக - 0.6 சதவீதமும், சிபிஐ- 0.6 சதவீதம் வாக்குகளும் பெற்றுள்ளன.
இது தவிர நோட்டாவிற்கு 1.1. சதவீத வாக்குகள் கிடைத்துள்ளன. இது மக்கள் நலக்கூட்டணி வாக்கு சதவீதத்தைவிட அதிகம் ஆகும்.












Click it and Unblock the Notifications