232 தொகுதிகளிலும் "நோட்டா"வுக்கு ஆதரவு அதிகரிப்பு.. சென்னையிலும் கிடுகிடு உயர்வு!
சென்னை: 2011 சட்டசபைத் தேர்தலில் சென்னையில் உள்ள 16 தொகுதிகளிலும் நூற்றுக் கணக்கில்தான் நோட்டாவுக்கு வாக்குகள் கிடைத்திருந்தன. ஆனால் இந்தத் தேர்தலில் ஆயிரக்கணக்காக அது எகிறியுள்ளது.
தமிழக அளவிலும் நோட்டாவுக்கு வாக்குகள் அதிகரித்துள்ளதையும் இந்தத் தேர்தலில் காண முடிந்தது. இந்தத் தேர்தலி்ல மொத்தமாக தமிழகத்தில் 5.61 லட்சம் வாக்குகள் நோட்டாவுக்கு விழுந்துள்ளன.
சென்னையைப் பொறுத்தவரை கடந்த தேர்தலை விட இந்த முறை அதிக அளவிலான வாக்குகள் நோட்டாவுக்குப் போயுள்ளது. எந்தெந்தத் தொகுதிகளில் எத்தனை வாக்குகள் நோட்டாவுக்குக் கிடைத்துள்ளது என்பதைப் பார்ப்போம்.

2011 தேர்தலில் மொத்தம் 3407
2011 சட்டசபைத் தேர்தலில் சென்னையில் மொத்தம் 3407 வாக்குகள் நோட்டாவுக்குக் கிடைத்திருந்தன. அதில் அதிகபட்சமாக சைதாப்பேட்டை தொகுதியில்தான் 360 வாக்குகள் விழுந்திருந்தன. குறைந்த அளவாக வில்லிவாக்கத்தில் 15 வாக்குகள் நோட்டாவுக்குக் கிடைத்திருந்தது.

2016 தேர்தலில் 53,173
2016 சட்டசபைத் தேர்தலில் மொத்தமாக 53,173 வாக்குகள் நோட்டாவுக்குப் போயுள்ளது. இதில் அதிகபட்சமாக வேளச்சேரி தொகுதியில் 4255 வாக்குகள் கிடைத்துள்ளன. குறைந்த அளவாக துறைமுகம் தொகுதியில் 2101 வாக்குகள் போயுள்ளன.

ஆர்.கே.நகர் - கொளத்தூர்
முதல்வர் ஜெயலலிதா போட்டியிட்டு வென்றுள்ள ஆர்.கே.நகரில் 2873 வாக்குகள் நோட்டாவுக்குப் போயுள்ளது. அதேபோல மு.க.ஸ்டாலின் வென்ற கொளத்தூர் தொகுதியில் 3554 பேர் நோட்டாவுக்கு ஓட்டுப் போட்டுள்ளனர்.

2011ல் 24,857 - 2016ல் 5.61 லட்சம்
கடந்த 2011 தேர்தலில் தமிழகம் முழுவதும் மொத்தம் 24 ஆயிரத்து 857 வாக்குகள் நோட்டாவுக்குக் கிடைத்தது. ஆனால் இந்தத் தேர்தலில் 5 லட்சத்து 61 ஆயிரத்து 244 வாக்குகள் நோட்டாவுக்குக் கிடைத்துள்ளது. அதாவது மொத்தம் பதிவான வாக்குகளில் 1.3 சதவீத வாக்குகள் நோட்டாவுக்குப் போயுள்ளது.

அதிகரிக்கும் விரக்தியே காரணம் - கோபால்சாமி
நோட்டாவுக்கு அதிக அளவிலான வாக்குகள் விழுவது குறித்து முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர் என்.கோபாலசாமி கூறுகையில் தற்போதைய அரசியல் மீது மக்களிடையே குறிப்பாக இளைஞர்கள், இளம் பெண்கள் மத்தியில் அதிகரித்து வரும் வெறுப்பு, விரக்தியே நோட்டாவுக்கு அதிக வாக்குகள் கிடைக்கக் காரணம் என்றார்.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications