சென்னையில் இட்லி மாவுக்கும் தீபாவளி ஆஃபர்.. முதல் பரிசு 10 கிராம் வெள்ளி காசு!
தீபாவளிக்கு மற்ற கடைகளுக்கு இணையாக சென்னையில் இட்லி மாவுக் கடை ஒன்று சலுகையை அறிவித்துள்ளது.
சென்னை : தீபாவளிக்கு மற்ற கடைகளுக்கு இணையாக சென்னையில் இட்லி மாவுக் கடை ஒன்று போட்டி போட்டு குலுக்கல் முறையிலான சலுகையை அறிவித்துள்ளது.
தீபாவளிக்காக ஆடை, ஆபரணங்களில் தள்ளுபடி அறிவித்த காலம் போய் இப்போது உள்ளாடை முதல் காலணி வரை அனைத்திற்கும் ஆஃபர் அறிவிக்கும் நவீன காலத்தில் நாம் இருக்கிறோம்.

இலவசம் என்ற வார்த்தையை வைத்து எப்படி அரசுகள் மக்களை கையில் வைத்துக் கொள்கின்றனரோ, அது போல தள்ளுபடி என்ற அறிவிப்பின் மூலம் வாடிக்கையாளர்களைக் கவர புதுப்புது விளம்பரங்களைச் செய்து வருகின்றனர் வணிக நிறுவனங்கள்.
அந்த வகையில் சென்னையில் இட்லி, தோசை மாவு கடை கூட அதிரடி விலை சலுகையை அறிவித்திருக்கிறது. இன்று தொடங்கி 3 நாட்களுக்கு மாவு வாங்குபவர்களுக்கு தினமும் குலுக்கல் முறையில் பரிசு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஒரு கிலோ மாவு ரூ. 35, அரை கிலோ மாவு ரூ.20 என்று தான் விலை போடப்படிருக்கிறது. ஆனால் இதற்கு தரப்படும் பரிசுகள் என்ன தெரியுமா தினமும் முதல் பரிசாக 1 நபருக்கு 10 கிராம் வெள்ளி காசு, 20 நபருக்கு எவர்சில்வர் தாம்பூலம் தட்டு.
சில்வர் தட்டு 10 முதல் 2 ரூபாய் என்று வைத்துக் கொண்டாலும், 10 கிராம் வெள்ளி இன்றைய விலையில் ரூ. 430. இப்படிப்பட்ட விலைச் சலுகையைத் தான் அந்த மாவுக்கடை அறிவித்துள்ளது. தீபாவளிக்கும் இட்லி, தோசை மாவுக் கடை கூட தள்ளுபடி, சலுகை அறிவிக்கும் உலகில் நாம் வாழ்கிறோமே என்பதை நினைக்கவே ஆச்சரியமாக இருக்கிறது.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications