இலை தலைமையிலான கூட்டணிக்கு பகீரத பிரயத்னம் செய்யும் இளவரசர் ராகுல்!
சென்னை: தமிழகத்தில் இலை கட்சி தலைமையிலான கூட்டணி அமைப்பதற்கான அனைத்து வித முயற்சிகளையும் காங்கிரஸ் துணைத் தலைவரான இளவரசர் ராகுல் காந்தி மேற்கொண்டுவருவதாக செய்திகள் உறுதிப்படுத்தியுள்ளன.
அண்மையில் கோட்டை தலைமை ஒரு முக்கியமான சந்திப்பை மேற்கொண்டது அனைவரையும் ஆச்சரியத்தில் மூழ்க வைத்தது. அந்த சந்திப்பால் அமைச்சரவையில்பெரிய மாற்றம் இருக்கும் என்றே தகவல்கள் பரவின.
ஆனால் அப்படிஒன்றும் அமைச்சரவை மாற்றம் நடைபெற்றவில்லை. கடந்த சில மாதங்களாகவே அந்த அதிமுக்கிய நபரை மையமாக வைத்து வலம் வரும் கூட்டணி விவகாரம்தான் இப்போதைய சந்திப்பிலும் பிரதானமாக இருந்ததாக சொல்லப்படுகிறது.

தமிழகத்தைப் பொறுத்தவரையில் இலைக் கட்சியுடன் கூட்டணி அமைத்துக் கொள்ள வேண்டும் என்று ராகுல் காந்தி இப்போது நினைக்கிறாராம். முன்பு முரசு கட்சியாரை அரவணைத்துக் கொள்ளலாம் என்று எண்ணியிருந்த ராகுலுக்கு அந்த கட்சியால் பெரிய அளவில் லாபம் இல்லை என்று சில புள்ளிவிவரங்களை காங்கிரஸில் உள்ள இலை ஆதரவு லாபி முன்வைத்திருக்கிறதாம்.
இதைத் தொடர்ந்து வேறுவழியில்லை.. தந்தை வழியில் இலையுடன் இணக்கமாக போய்விடுவது என்று முடிவெடுத்திருக்கிறாராம். ஆனால் தமிழகத்தில் இலை தலைமையுடன் பேசக் கூடிய காங்கிரஸ் தலைவர் எவருமே இல்லை என்பதுடன் எவருமே தயாராக முன்வரவில்லை என்றும் கூறப்படுகிறது. இதனால் இலை தலைமையுடன் இணக்கமாக இருக்கும் அதிமுக்கிய தலைவரையே இந்த கூட்டணிக்கும் தூதுவராக்கியிருக்கிறாராம் ராகுல்.
ஆனால் இலை தலைமையோ, இத்தனை அலட்சியத்துக்கும் அவமானத்துக்கும் பிறகும் உங்களோடு கூட்டணி வைத்தால் எப்படி சரி வரும் என்று எதிர்கேள்வி போட ஜெர்க் ஆகி நிற்கிறதாம் காங்கிரஸ். அந்த வழக்கு, இந்த வழக்கை காட்டியாவது பணியவைக்கலாம் என்றெல்லாம் கூட கோட்டிடும் காட்டியதாம் டெல்லி மேலிடம்.. நாங்க பார்க்காத வழக்கா என்ற தொனியில் நமுட்டு சிரிப்புடன் விடை கொடுத்ததாம் இலை தலைமை.
இருந்தாலும் இழவு காத்த கிளியாக தேர்தல் முடிந்த பின்னராவது இலை தலைமை வந்துவிடும் என்று இளவரசர் ராகுல் காத்திருக்கிறாராம்!
-
கர்நாடகா முதல்வராக தேர்வானார் டிகே சிவக்குமார்.. காங்., எம்எல்ஏக்கள் ஆதரவு.. பதவியேற்பு எப்போது? -
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications