டிஆர்பி குடுமிப்புடி சண்டை..'பிக் பாஸை' அசிங்கப்படுத்தும் ஜி டிவி!
விஜய் டிவியின் பிக் பாஸ் நிகழ்ச்சியை கலாய்த்து ஜி தமிழில் குழந்தைகளை வைத்து கதையாக்கம் செய்யப்பட்டுள்ள ஜி தமிழின் ஜூனியர் சூப்பர் ஸ்டார், ட்ரோல்களை மிஞ்சும் வகையில் உள்ளது.
சென்னை : விஜய் டிவியின் பிக்பாஸ் நிகழ்ச்சி டிஆர்பி ரேட்டிங்கிற்காக போட்டியாளர்களை அழவிட்டு, சேரி பிஹேவியர் பேச்சை அவிழ்த்து விட்டு பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால் பிக்பாஸ்ஸை செமயாக கலாய்த்து போட்டி சேனலான ஜி தமிழ் பிக்பாஸை ஓட்டியுள்ளது.
வடஇந்தியாவில் பிரபலமான பிக்பாஸ் நிகழ்ச்சியை விஜய் டிவி தமிழில் வழங்கி வருகிறது. 15 போட்டியாளர்களில் வாக்குகள் அடிப்படையில் 4 பேரை இது வரை போட்டியில் இருந்து வெளியேற்றியுள்ளது. டிஆர்பி ரேட்டிங்கிற்காக பிக்பாஸ் நிகழ்ச்சி தமிழில் கொண்டு வரப்பட்டதாக சொல்லப்பட்டது. இந்த நிகழ்ச்சியை முன்னணி நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார்.
ஆனால் சீரியல் டிஆர்பியோடு விஜய் டிவியின் பிக்பாஸ் டிஆர்பி போட்டி போட முடியாமலே இருந்தது. இதனால் போட்டியாளர்களான ஜூலியை கதறவிட்டு, ஒருவருக்கொருவர் புறம் பேசுவது, காயத்ரியை வைத்து சேரி பிஹேவியர் பேச்சு என்று புரோமக்களை போட்டு பார்வையாளர்களை பிடிக்க முயற்சித்து வருகிறது.

பிக்பாஸை இமிடேஷன்
இந்நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியை செமயாக கலாய்த்து போட்டி சேனலான ஜி தமிழ் ஒரு நிகழ்ச்சியை கதையாக்கம் செய்துள்ளது. சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகும் குழந்தைகளுக்கான ஜூனியர் சூப்பர் ஸ்டார்2 நிகழ்ச்சியில் தான் குழந்தைகள் பிக்பாஸை இமிடேட் செய்து அசத்தியுள்ளனர்.

கமல் என்ட்ரி முதல் ஸ்லோகன் வரை
பிக்பாஸ் நிகழ்ச்சியில் தொகுப்பாளர் கமல் என்ட்ரி போலவே சிறுவன் கார்முகில்வண்ணன் அசத்தலாக என்ட்ரி கொடுத்து அனைவரின் வாழ்த்தையும் அள்ளியுள்ளான். பெரிய பாஸ் நிகழ்ச்சியின் செகண்ட் லைன் என்ன தெரியுமா 3 நாட்கள், 30 கேமரா ஓடவும் முடியாது உக்காரவும் முடியாதுங்குறது தான் லந்து கூட்டும் நக்கல்.

மரண கலாய் கேரக்டர்கள்
கவிஞர் அனேகன், ஜோலி, பஞ்சா பருப்பு, என்று முக்கியமான 5 கேரக்டர்களை போட்டு கலாய்த்தெடுத்துதிருக்கிறார்கள். சில காட்சிகளில் மகா மட்டமாக கலாய்த்துள்ளனர். பிக்பாஸ் வீட்டுல தமிழ் பேசுனும்னு விதிய சொல்லியிருந்தாரு கமல்ஹாசன் அதையும் கலாய்த்து பெரிய பாஸ்னு சொல்றீங்களே அது சங்கத் தமிழா என்று டயலாக்கில் பின்னி பெடலெடுக்கிறார்கள் குழந்தைகள்.

அள்ளும் லைக்ஸ்
பிக்பாஸ் நிகழ்ச்சியை வைத்து மீம்ஸ், ட்ரால்கள் என்று வலம் வரும் நிலையில் அதையெல்லாம் தூக்கி சாப்பிடுகிறது இந்த நிகழ்ச்சி. மரணகலாய் கலாய்க்கும் இந்த நிகழ்ச்சி சமூக வலைதளத்தில் செமையாக லைக்ஸை அள்ளியுள்ளது.

வெச்சு செஞ்சிருக்காங்க
ஒவ்வொரு விஷயத்திலும் பார்த்து செஞ்சிருக்காங்க ஜி தமிழ், ஓப்போ விளம்பரதாரரை அப்பா மொபைல் என்றும் கட்டிப்பிடிக்கலேன்னு கவலைப்படும் ஜோலி, தமிழ்த்தாய் வாழ்த்தை கேவலப்படுத்தியவர்களை செமையாக வாரியெடுத்துள்ளனர் ஜூனியர் சூப்பர் ஸ்டார்ஸ்.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு












Click it and Unblock the Notifications