For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நொய்யல் ஆற்று நுரையும்... பாம்பு கடி நுரையும்... - அமைச்சருக்கு சமர்பணம்

மக்கள் சோப்பு போட்டு குளிக்கும் நீர் கலந்ததாலேயே நொய்யல் ஆற்றில் நுரை கிளம்பியதாக சுற்றுச்சூழல்துறை அமைச்சர் கருப்பண்ணன் கூறியது சமூக வலைதளங்களில் கிண்டலை கிளப்பியுள்ளது.

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சென்னை: திருப்பூரில் நொய்யல் ஆற்று நீர் நுரைத்தபடி ஓடியது. இதனால் பொதுமக்கள் பலரும் அச்சமடைந்தனர். இது வெறும் சோப்புநுரைதான் என்று கூறியுள்ளார் சுற்றுச்சூழல்துறை அமைச்சர் கருப்பண்ணன்.

ஆற்று நீர் நுரையுடன் ஓடியது ஏன் தெரியுமா? சாக்கடை நீர்கலக்கிறது. கூடவே வீடுகளில் நாம் சோப்பு போட்டு குளிக்கும் நீரும் இதில் கலக்கிறது, இதன் காரணமாகவே நுரை ஏற்பட்டுள்ளது என்று அமைச்சர் கூறினார்.

சோப்பு நீர் கலந்ததால் நொய்யல் ஆற்றில் நுரை கிளம்பியதாக அமைச்சர் கருப்பண்ணன் கூறிய கருத்து சமூக வலைதளங்களில் கேலி செய்யப்படுகிறது. தெர்மகோல் போட்டு மூடும் திட்டத்தை விட நொய்யல் ஆற்றில் கிளம்பும் நுரைக்கு கொடுத்த விளக்கம் ரொம்ப புதுசா இருக்கே என்று கூறி கிண்டலடித்து வருகின்றனர்.

பாம்பு சோப்பு போட்டு குளிக்குமோ...

கோவை மக்கள் பயன்படுத்திய சோப்பின் நுரை தான் நொய்யல் ஆற்றில் வருகிறது - அமைச்சர்_கருப்பண்ணன்...
பாம்பு கடிச்சவனுக்கு வாயில நுரை தள்ளுது... #பாம்பு சோப்பு போட்டு குளிச்சிருக்கும் போலயே என்று சந்தேகம் கிளப்புகிறார் பொம்மையா முருகன்.

நான் குளிச்ச சோப்பு நுரை

நான் குளித்த சோப்பு நுரை திருப்பூரை கடந்து #காவிரியில் கலக்கும் என்கிற பெருமையை எப்படி சொல்வேன்....!
என்று பதிவிட்டுள்ளார் ஒரு திருப்பூர்காரர்.

ஏன்யா சோப்பு போட்டு குளிக்கிறீங்க?

கோயம்புத்துர் காரய்ங்கே ஏன்யா சோப்பு போட்டு குளிக்கிறீங்க? நீங்க போட்டு சோப்பால நொய்யல் ஆத்துல நொப்பும் நுரையும் அடிக்குதாம்ல என்று கேட்கிறார் ஒரு வலைஞர்.

மாதவம் செய்ததம்மா

நொய்யல் ஆறு நுரைக்கு சோப்பு தண்ணீரே காரணம்: அமைச்சர் கருப்பண்ணன்... மாதவம் செய்ததம்மா இந்த மாநிலம் தாங்கள் பயனுற வாழ்வதற்கு என்று பதிவிட்டுள்ளார் ஒரு வலைஞர்.

English summary
TN environment minister Karuppanan statement goes viral in Social media.TN environment minister Karuppanan says the soap water from houses mix up with Noyyal river is the reason for foam in the river
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X