புதுச்சேரி என்.ஆர். காங்கிரஸ் பிரமுகரும், தொழிலதிபருமான தயாளன் தூக்கிட்டு தற்கொலை
என்.ஆர். காங்கிரஸ் கட்சியின் பிரமுகர் தயாளன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்தச் சம்பவம் புதுச்சேரியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Subscribe to Oneindia Tamil
புதுச்சேரி: தொழிலதிபரும், என்.ஆர். காங்கிரஸ் கட்சியின் பிரமுகருமான தயாளன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
புதுச்சேரி என்.ஆர்.காங்கிரஸ் பிரமுகரும் தொழிலதிபருமான தயாளன் அவரது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை தற்கொலை செய்து கொண்ட இடத்திற்கு மேட்டுப்பாளையம் போலீசார் விரைந்து சென்றனர். அங்கு தயாளன் உடலைக் கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தற்கொலை செய்து கொண்ட தயாளன் கடந்த சட்டசபைத் தேர்தலில் தற்போதைய சபாநாயகர் வைத்திலிங்கத்தை எதிர்த்துப் போட்டியிட்டார். காமராஜர் நகர் தொகுதியில் என்.ஆர்.காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்ட அவர் தோல்வியடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications