திருச்சி மாநாட்டில் சட்டசபைத் தேரத்லில் போட்டி குறித்து முடிவு - சீமான்

Subscribe to Oneindia Tamil

நாகர்கோவில்: திருச்சி மாநாட்டில் தமிழக சட்டசபைத் தேர்தலில் போட்டியிடுவது குறித்த முடிவை நாம் தமிழர் கட்சி எடுக்கவுள்ளதாக அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.

நாகர்கோவில் வந்த சீமான் அங்கு செய்தியாளர்களிடம் பேசுகையில்,

தமிழக மீனவர்கள் 5 பேருக்கு இலங்கை அரசு மரண தண்டனை விதித்ததை கண்டிக்கிறேன். கடந்த காங்கிரஸ் ஆட்சியில் இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்களை சுட்டுக் கொன்றனர். தற்போதைய ஆட்சியில் தமிழக மீனவர்கள் சட்டத்தின் மூலம் கொல்ல தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

NT to decide on Assembly election during its Trichy conference,says Seeman

தமிழக மீனவர்கள் போதைப் பொருள் எதுவும் கடத்த வில்லை என்று விசாரணை அதிகாரிகள் கூறிய பின்னரும், அவர்களுக்கு தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது. சர்வதேச அளவுக்கு பெருமை வாய்ந்த இந்தியாவை குட்டி நாடு மிரட்டி பார்க்கிறது. இதற்கு உரிய நடவடிக்கையை இந்தியா எடுக்க வேண்டும்.

வருகிற சட்டசபைத் தேர்தலில் தனித்து போட்டியிட வேண்டுமா? என்பது பற்றி 2015 மே மாதம் 18-ந்தேதி திருச்சியில் நடக்கும் மாநாட்டில் முக்கிய முடிவு எடுக்கப்படும் என்றார் சீமான்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+