நடுரோட்டில் நிர்வாண நிலையில் கிடந்த வாலிபரின் பிணம்.. குமரி அருகே பரபரப்பு
நாகர்கோவில்: கன்னியாகுமரி அருகே நிர்வாண நிலையில் வாலிபர் ஒருவரின் உடல் நடுரோட்டில் கிடந்ததால் அந்த வழியாக வந்த பொதுமக்கள் அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர்.
மார்த்தாண்டம் அருகே காஞ்சரக்கோடு சாங்கை பகுதியைச் சேர்ந்தவர் விஜயகுமார். இவருக்கு மனைவியும், 2 பிள்ளகைளும் உள்ளனர். இவர் தவணை முறையில் வீட்டு உபயோக பொருட்கள் விற்பனை செய்யும் ஒரு கடையில் பணம் வசூல் செய்யும் ஊழியராக வேலை பார்த்து வந்துள்ளார்.
இந்த நிலையில் அவரது வீடு அருகே உள்ள தேசிய நெடுஞ்சாலையில் நள்ளிரவில் சாலையில் விஜயகுமார் உடலில் துணி இல்லாமல் நிர்வாண நிலையில் பிணமாக கிடந்தார். இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் அதிர்ச்சி அடைந்தனர்.
அவர்கள் இதுபற்றி விஜயகுமார் குடும்பத்தினருக்கும் மார்த்தாண்டம் போலீசாருக்கும் தகவல் கொடுத்தனர். தகவல் கிடைத்ததும், மார்த்தாண்டம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விஜயகுமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குழித்துறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
போலீசார் விசாரணையில் விஜயகுமார் உடலில் வாகனம் மோதியதற்கான தடயம் இருந்தது. இதனால் அவர் அந்த வழியாக நடந்து சென்ற போது அடையாளம் தெரியாத வாகனம் மோதிவிட்டு நிற்காமல் சென்று இருக்கலாம் என்று கருதுகிறார்கள்.
அதே சமயம் விஜயகுமாரின் குடும்பத்தினர் அவரது சாவில் சந்தேகம் இருப்பதாக தெரிவித்து உள்ளனர். விஜயகுமார் மீது வாகனம் மோதி இருந்தால் அவரது உடலில் இருந்து துணிகள எப்படி காணாமல் போகும் என அவர்கள் சந்தேகம் எழுப்பி உள்ளனர். இதுபற்றி போலீசார் தீவிர விசாரணை நடத்தி இதில் உள்ள மர்மத்தை கண்டு பிடிக்க வேண்ம் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
நடு ரோடடில் வாலிபர் பிணம் கிடந்ததை பார்த்த பொதுமக்கள் அலறி ஓடிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications