நிர்வாண “வாக்”...குதித்து குதித்து “டான்ஸ்”- நாமக்கல்லில் கைதான "குஜால்" சாமியார்
நாமக்கல்: நாமக்கல் மாவட்டத்தில் சாமியார் ஒருவர் தெருவில் இறங்கி நிர்வாணமாக வலம் வந்ததால் பெரும் அதிர்ச்சியும், பரபரப்பும் ஏற்பட்டது. இதனையடுத்து அவரை போலீஸார் கைது செய்தனர்.
நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூரை அடுத்த, பொத்தனூர் வடக்கு தெருவைச் சேர்ந்தவர் வெங்கடாச்சலம். இவர் வேலூரில் கைரேகை மற்றும் ஜாதகம் பார்த்து வருகிறார். மனைவியை பிரிந்து தனியாக வசிக்கிறார்.

கடந்த சில நாட்களாக அவர் வீட்டில் இரவு நேரத்தில் சத்தமாக பக்தி பாடல் பாடுவது, வீட்டுக்குள்ளே குதித்து, குதித்து ஆடுவது, சுவரை எட்டி உதைப்பது, நிர்வாணமாக கண்களை மூடி தியானம் செய்து கொண்டே வீட்டின் முன் நடந்து வருவது போன்ற ஒழுங்கீன வேலைகளில் ஈடுபட்டு வந்துள்ளார்.
இதைப் பார்த்த பக்கத்து வீடுகளில் வசிக்கும் பெண்கள் கொதிப்படைந்தனர். சித்தர் என கூறிக்கொண்டு நிர்வாண பூஜை செய்யும் வெங்கடாசலம் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என வேலூர் போலீசாரிடம் புகார் கொடுத்தனர். இதையடுத்து சப் இன்ஸ்பெக்டர் சண்முகம் நிர்வாண சாமியாரை கைது செய்து சிறையில் அடைத்தார்.
-
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
எடப்பாடி பழனிசாமின்னா சும்மாவா.. வீட்டுக்குள் போன 3 அரசியல்வாதிகள்.. ஒரே நொடியில் ஆடிப்போன வேலுமணி -
மகளிருக்கு ரூ.2,500, விடியல் பயணம் திட்டம் எப்போது அமலாகும்? அமைச்சர் செங்கோட்டையன் கொடுத்த பதில் -
திருச்சி திருவானைக்காவல் கோவில் பிரசாதம் தயாரிப்பு தேதி குறித்த மீம்ஸ்.. அமைச்சர் ரமேஷ் விளக்கம்












Click it and Unblock the Notifications