மெரினாவில் ”காணும் பொங்கல்” காண வரும் குழந்தைகளுக்கு ”போன் நம்பர் வளையம்”- காவல்துறை!
சென்னை: பொங்கல் விழாவிற்கு மெரினாவிற்கு வரும் குழந்தைகளின் கைகளில் போன் நம்பர் அடங்கிய வளையம் மாட்ட காவல்துறை முடிவு செய்துள்ளது. இதனால் குழந்தைகள் மாயமானால் கண்டுபிடிக்க எளிதாக இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காணும் பொங்கல் அன்று மெரினா கடற்கரைக்கு பெற்றோர்களுடன் வரும் குழந்தைகள் விளையாடிக் கொண்டிருக்கும் போது திடீரென காணாமல் போய் விடுவார்கள். அவர்களை தேடிக் கண்டு பிடிப்பது என்பது போலீசாருக்கு சிரமமாகவே இருந்து வந்தது. மாயமாகும் குழந்தைகள் எங்காவது அழுது கொண்டிருக்கும். அவர்களை யாராவது பார்த்து போலீஸ் உதவி மையத்தில் கொண்டு போய் விடுவார்கள்.

பின்னர் குழந்தையின் அங்க அடையாளங்களையோ அல்லது அவர்கள் அணிந்திருக்கும் ஆடைகளை வைத்தோ போலீசார் ஒலி பெருக்கியில் அறிவிப்பார்கள். இதன் பின்னர் பதறியடித்துக் கொண்டு பெற்றோர்கள் ஓடிவந்து குழந்தையை மீட்டுச் செல்வார்கள். இதனை தவிர்ப்பதற்காக கடந்த ஆண்டு போலீசார் மற்றும் பெற்றோர்களின் போன் நம்பர் அடங்கிய வளையம் குழந்தைகளின் கைகளில் அணிவிக்கப்பட்டது.
அந்த வளையத்தில் மெரினா, அண்ணாசதுக்கம் போலீஸ் நிலையங்களின் போன் நம்பர்கள், இன்ஸ்பெக்டர்களின் செல்போன் நம்பர்கள், சம்பந்தப்பட்ட குழந்தையின் பெற்றோர்களின் செல்போன் எண்கள் ஆகியவை இடம் பெற்றிருந்தது. இதனை வைத்து மாயமான நூற்றுக்கும் மேற்பட்ட குழந்தைகள் எளிதாக கண்டு பிடிக்கப்பட்டனர்.
இந்த ஆண்டும் அதே போன்று வளையம் குந்தைகளின் கைகளில் அணிவிக்கப்படும் என்று உயர் போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். மெரினா கடற்கரை மட்டுமின்றி, வணிக வளாகங்கள், பொழுது போக்கு பூங்காக்கள் ஆகியவற்றிலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட உள்ளன. மணல் பரப்பில் வேகமாக செல்லும் 4 வாகனங்கள் போலீசில் உள்ளன. இதனை மெரினா மற்றும் எலியட்ஸ் கடற்கரைகளில் பயன்படுத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
-
Vijay Friend: "சார் அந்த கச்சத்தீவு.." நோ கமெண்ட்ஸ்னு சொன்ன மீன்வளத் துறை அமைச்சர் ஸ்ரீநாத்! -
பிச்சு உதற போகுது கனமழை.. 7 மாவட்டங்களில் டமால் டுமீல் தான்! வங்கக்கடல் சக்கரத்தால் இனி கூலிங் தான்! -
சென்னையில் பச்சிளம் குழந்தை கடத்தல்.. ஆக்ஷனில் இறங்கிய போலீஸ்! 5 மணி நேரத்தில் குற்றவாளி கைது! -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2500 இருக்கட்டும், புதிய பயனாளிகளுக்கு அடுத்த விண்ணப்பம் எப்போது -
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
பாக்கெட் தோசை மாவு வாங்கறீங்களா? பிரிட்ஜில் இட்லி மாவு வைக்கிறீங்களா? இதை முதல்ல தெரிஞ்சுக்கோங்க -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி












Click it and Unblock the Notifications