நர்ஸ் கையைப் பிடித்து இழுத்து அத்துமீறல்... ஆரம்ப சுகாதார மைய ஊழியர் கைது
நெல்லை: நெல்லை அருகே ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணியாற்றிய நர்சை அலுவலகத்தில் வைத்து பலத்காரம் செய்ய முயன்ற அலுவலர் கைது செய்யப்பட்டார்.
நெல்லை அருகே உள்ள வீரவநல்லூர் வடக்கு தெருவை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன். இவரது மனைவி அம்பிகா (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் பத்தமடை ஆரம்ப சுகாதார நிலையத்தில் நர்சாக பணியாற்றி வந்துள்ளார். பின்னர் அவர் திருவாரூர் மாவட்டத்திற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் அம்பிகா, சான்றிதழ் ஒன்று வாங்குவதற்காக பத்தமடை ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சென்றுள்ளார். அப்போது அங்கு அலுவலராக பணியாற்றி வரும் சேரன்மகாதேவி வைத்தி மேல தெருவை சேர்ந்த சுரேஷ்குமார் என்பவர், அம்பிகாவின் கையை பிடித்து இழுத்து மானபங்கப்படுத்தினாராம்.
இதனை சற்றும் எதிர்பாராத அம்பிகா, அவரிடம் இருந்து திமிறியுள்ளார். மேலும் கூச்சல் போட்டுள்ளார். அக்கம்பக்கத்தினர் இவரது சத்தம் கேட்டு ஆரம்ப சுகாதார வாளகத்தில் குவியவே சுரேஷ்குமார் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார்.
உடனடியாக இது குறித்து பத்தமடை போலீஸ் நிலையத்தில் அம்பிகாவின் கணவர் பாலகிருஷ்ணன் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி சுரேஷ்குமாரை கைது செய்தனர். பட்டபகலில் நடந்த இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications