பெண் குழந்தை பிறந்த வருத்தத்தில் இருந்த பெற்றோரை ஏமாற்றி ரூ. 30,000க்கு விற்ற நர்ஸ்.. சஸ்பெண்ட்!
கிருஷ்ணகிரி : புதிதாக பிறந்த பெண் குழந்தையை ரூ. 30 ஆயிரத்திற்கு விற்பனை செய்த ஆரம்ப சுகாதார நிலைய செவிலியர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை வட்டம், அஞ்செட்டி அருகேயுள்ள பாண்டுரங்கன்தொட்டியைச் சேர்ந்த விவசாயி பெருமாள் என்பவரது மனைவி சேலத்தம்மாள் (23). ஏற்கனவே இரண்டு பெண் குழந்தைகள் உள்ள நிலையில் மீண்டும் கர்ப்பம் தரித்தார் சேலத்தம்மாள். நிறை மாதக் கர்ப்பிணியாக கடந்த சில நாட்களுக்கு முன்னர் அஞ்செட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டார்.

அங்கு அவருக்கு மீண்டும் பெண் குழந்தை பிறந்தது. இதனால், சேலத்தம்மாள் மற்றும் அவரது கணவர் சோகமாக இருந்ததாகத் தெரிகிறது. இதனை தனக்கு சாதகமாக்கிக் கொண்ட செவிலியர் அல்போன்சா, அவர்களிடம் ஆசை வார்த்தைக் கூறி, அக்குழந்தையை விற்றுத் தருவதாகக் கூறியுள்ளார்.
இதை நம்பிய சேலத்தம்மாளும் அல்போன்சாவிடம் தனது குழந்தையைக் கொடுத்துள்ளார். ஆனால், கூறியபடி ரூ. 30 ஆயிரம் தராமல் சேலத்தம்மாளிடம் ரூ.20 ஆயிரம் மட்டுமே கொடுத்துள்ளார் அல்போன்சா.
இதற்கிடையே குழந்தை விற்கப்பட்ட விவகாரம் காவல் துறையினருக்கும், மருத்துவமனை அதிகாரிகளுக்கும் தெரிய வந்தது. அதனைத் தொடர்ந்து, தக்கட்டி கிராம நிர்வாக அலுவலர் கோவிந்தன், தேன்கனிக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் குழந்தை விற்பனை தொடர்பாக புகார் அளித்தார்.
மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் ஜெயம் வழக்குப் பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டு செவிலியர் அல்போன்சா, குழந்தையின் தந்தை பெருமாள், தாய் சேலத்தம்மாள் ஆகியோரிடம் போலீஸார் விசாரணை நடத்தினர். அதில் குழந்தை விற்கப்பட்டது உறுதி செய்யப்பட்டது.
இந்த விவகாரம் தொடர்பாக கிருஷ்ணகிரி மாவட்ட சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் பிரேம்குமாரும் விசாரணை நடத்தினார். தொடர்ந்து, செவிலியர் அல்போன்சாவைப் பணியிடை நீக்கம் செய்து அவர் உத்தரவிட்டார்.
அல்போன்சாவிடம் போலீசார் நடத்திய விசாரணையில், பணத்துக்காக விற்கப்பட்ட அக்குழந்தை தற்போது கேரளாவில் உள்ளதாகத் தெரிய வந்துள்ளது. மேலும், இதற்கு முன்னர் பலமுறை பணத்தை வாங்கிக் கொண்டு குழந்தைகளை அல்போன்சா விற்றதாகவும் கூறப்படுகிறது. போலீசார் தொடர்ந்து இது தொடர்பாக அல்போன்சாவிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications