செவிலியர்களுக்கு ஊதிய உயர்வு.. பேச்சுவார்த்தைக்கு பிறகு அமைச்சர் விஜயபாஸ்கர் அறிவிப்பு
செவிலியர்களுக்கு ஊதியம் உயர்த்தி வழங்கப்படும் என அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
Recommended Video

சென்னை: செவிலியர்களுக்கு ஊதியம் உயர்த்தி வழங்கப்படும் என அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். சென்னை தலைமைச் செயலகத்தில் செவிலியர்களுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தைக்குப் பின் அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
பணிநிரந்தரம், ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை டிஎம்எஸ் வளாகத்தில் செவிலியர்கள் இரண்டாவது நாளாக இன்று உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களுக்கு அரசியல் கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன.
இந்நிலையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் விஜயபாஸ்கர் செவிலியர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த அரசு தயாராக இருப்பதாக தெரிவித்தார். இதைத்தொடர்ந்து சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கருடன் செவிலியர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர்.

20 பிரதிநிதிகள் பங்கேற்பு
இந்த பேச்சுவார்த்தை சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது. இதில் செவிலியர்கள் தரப்பில் இருந்து 20 பிரதிநிதிகள் பங்கேற்றனர்.

வாபஸ் பெற அறிவுரை
இந்நிலையில் பேச்சுவார்த்தைக்குப் பிறகு அமைச்சர் விஜயபாஸ்கர் தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது போராட்டத்தை வாபஸ் பெற செவிலியர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

ஊதியம் உயர்த்தி வழங்கப்படும்
நல்ல முடிவு எடுப்பார்கள் என்று அரசு எதிர்பார்க்கிறது என்றும் அவர் கூறினார். செவிலியர்களுக்கு ஊதியம் உயர்த்தி வழங்கப்படும் என பேச்சுவார்த்தையின் போது கூறியதாக அமைச்சர் விஜயபாஸ்கர் கூறினார்.

கால அவகாசம் தேவைப்படுகிறது
மத்திய அரசிடம் அனுமதி பெற்றுத்தான் பணி நிரந்தரம் செய்ய முடியும் என்றும் அவர் கூறினார். செவிலியர்களை பணி நிரந்தரம் செய்ய கால அவகாசம் தேவைப்படுகிறது என்றும் அமைச்சர் விஜயபாஸ்கர் கூறினார்.
-
தவெக அருண்ராஜ் படத்துடன்.. வாக்காளர்களுக்கு விநியோகம் செய்ய இருந்த சில்வர் பாத்திரங்கள் பறிமுதல்! -
என்னது துணை முதலமைச்சர் பதவி தராங்களா.. விஜய் தான் முதலமைச்சர்.. செங்கோட்டையன் தடாலடி -
அமெரிக்க கடற்படை உலகிலேயே மிகவும் சக்தி வாய்ந்தது.. ஏன் ஹார்முஸ் ஜலசந்தியை பாதுகாக்க முடியவில்லை? -
கொட்டிய ஆலங்கட்டி மழை.. கோவை, ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களில் ஐஸ் மழை பெய்ததால் மக்கள் மகிழ்ச்சி! -
"இது" இல்லை என்றால் சிலிண்டர் வராது! புக்கிங் விதிகளை திடீரென மாற்றிய மத்திய அரசு! முக்கிய அறிவிப்பு -
இப்போ வேண்டாம்.. தேர்தலுக்கு பின் ஆதரவு தருகிறேன்.. சிஎம் போஸ்ட் தாங்க.. பாஜகவிடம் பேசிய விஜய்? -
தங்க மழை கொட்ட போகுது.. PF வச்சு இருக்கீங்களா? சம்பள உச்சவரம்பு ₹25,000 ஆக உயருது? மாஸ் பிளான் -
வடிவேலுவை சினிமாவில் நுழைய விட்டதும், வளர்த்து விட்டதும் தப்பு.. ப்ளூ சட்டை மாறன் காட்டம்! பின்னணி சம்பவம் -
விஜய் ஏமாத்திட்டாரு.. பருத்தி மூட்டை குடோனிலேயே இருந்திருக்கலாம்.. திமுகவில் இணையும் செங்கோட்டையன்? -
Annamalai: 80 சீட்+ துணை முதல்வர் பதவி? பாஜக கூட்டணிக்கு விஜய் வருகிறாரா? அண்ணாமலை கொடுத்த விளக்கம் -
விஜய் வந்தால்! அதிமுக 134 தொகுதிகளில் மட்டுமே போட்டியிடும்? எடப்பாடி பழனிசாமியின் சீட் கணக்கு! -
வேலைக்கு ஆகாத டிரம்ப் பிளான்! அமெரிக்காவின் தலைமையை ஏற்க தயங்கும் உலக நாடுகள்! ஈரான் வெற்றி!












Click it and Unblock the Notifications