ஜங்க் ஃபுட் வேண்டாம்... காரைக்குடி பள்ளியில் உலக ஊட்டச்சத்து வார விழா
காரைக்குடி பள்ளியில் ஜங்க் ஃபுட் தீமை பற்றி மாணவர்களுக்கு எடுத்துரைக்கப்பட்டது.
காரைக்குடி: சத்தான உணவுகளைப் பற்றி மாணவர்களுக்கு எடுத்துக் கூறும் வகையில் காரைக்குடி பள்ளியில் உலக ஊட்டச்சத்து வார விழா கொண்டாடப்பட்டது.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி இராமநாதன் செட்டியார் நகராட்சி உயர்நிலைப்பள்ளியில் வெள்ளிக்கிழமையன்று உலக ஊட்டச்சத்து வார விழா நடைபெற்றது.
தலைமையாசிரியர் திரு. ஆ. பீட்டர் ராஜா அவர்கள் தலைமையேற்றார். காரைக்குடி அப்பல்லோ மருத்துவமனை,மக்கள் தொடர்பு அலுவலர், திரு. சங்கரலிங்கம் அவர்கள் முன்னிலை வகித்தார். பட்டதாரி ஆசிரியர் திருமதி. கீதா அவர்கள் அனைவரையும் வரவேற்றார்.

ஜங்க் ஃபுட் தீமை
காரைக்குடி அப்பல்லோ மருத்துவமனை உணவு நிபுணர் சத்திய பிரியா அவர்கள், தனது சிறப்புரையில், ஆரோக்கிய உணவு பழக்கங்கள், நூடுல்ஸ், பாஸ்தா போன்ற ஜங் உணவுகளின் தீமைகள் பற்றி மாணவர்களுக்கு விளக்கினார்.

சரிவிகித உணவு
மேலும் மாணவர்களுக்கு சரிவிகித உணவு, விட்டமின்களின் பயன்பாடுகள், உணவு பழக்க வழக்கங்கள், கால தாமதமாக உணவு உட்கொள்வதால் அடையும் தீமைகள் அடங்கிய படத் தொகுப்பு மூலம் தெளிவாக விளக்கினார்கள்.

சத்தான உணவுகள்
காரைக்குடி அப்பல்லோ மருத்துவமனை மக்கள் தொடர்பு அலுவலர், திரு. சங்கரலிங்கம் அவர்கள், புரதச்சத்து, மாவுச்சத்து, நார்ச்சத்து போன்ற ஊட்டச்சத்துக்களைப் பற்றி மாணவர்களுக்கு எடுத்துக் கூறினார்.

நன்றியுரை
இந்நிகழ்ச்சியின் நிறைவாக பட்டதாரி ஆசிரியர் திருமதி. உஷா அவர்கள் நன்றி கூறினார். பட்டதாரி ஆசிரியர் திரு. முத்துவேல்ராஜன் அவர்கள் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தார்.
-
சல்லி சல்லியாக நொறுங்கிடுச்சே.. துபாய் அஸ்திவாரமே ஆடுதுங்க.. 'சொர்க்க பூமி' இப்படி ஆகிடுச்சே! -
விஜய் ஏமாத்திட்டாரு.. பருத்தி மூட்டை குடோனிலேயே இருந்திருக்கலாம்.. திமுகவில் இணையும் செங்கோட்டையன்? -
விஜய் வந்தால்! அதிமுக 134 தொகுதிகளில் மட்டுமே போட்டியிடும்? எடப்பாடி பழனிசாமியின் சீட் கணக்கு! -
இப்போ வேண்டாம்.. தேர்தலுக்கு பின் ஆதரவு தருகிறேன்.. சிஎம் போஸ்ட் தாங்க.. பாஜகவிடம் பேசிய விஜய்? -
Election Exclusive: நெருங்குது கிளைமேக்ஸ்..தாமரையுடன் கைகோர்க்கும் விசில்! நள்ளிரவில் ஹோட்டல் மீட்டிங்.. டோட்டல் மாற்றம் -
திருவள்ளூர் மக்கள் ஏக்கத்துடன் பார்த்த பல ஆண்டு கனவு... ரயில் நிலையத்தில் பார்த்துமே பெரு மகிழ்ச்சி -
விஜய்க்கு புது ஆஃபர் கொடுக்கும் பாஜக? 80 தொகுதி + துணை முதல்வர் பதவி! டெல்லியில் பரபர பாலிடிக்ஸ் -
"இது" இல்லை என்றால் சிலிண்டர் வராது! புக்கிங் விதிகளை திடீரென மாற்றிய மத்திய அரசு! முக்கிய அறிவிப்பு -
தேர்தல் தேதிகளை அறிவித்த நொடி.. சட்டென தேனி வருசநாடு பற்றி பேசிய தேர்தல் ஆணையர்.. ஏன் தெரியுமா? -
பெரிய பிரச்சனையில் சிக்கும் இந்தியா! அமெரிக்காவுடன் சேர்ந்ததுக்கு மொத்தமா முடிய போகுது! -
வேலைக்கு ஆகாத டிரம்ப் பிளான்! அமெரிக்காவின் தலைமையை ஏற்க தயங்கும் உலக நாடுகள்! ஈரான் வெற்றி! -
போச்சு.. திமுக கூட்டணியில் முதல் விக்கெட்? பாஜக பக்கம் சாயும் பண்ருட்டி வேல்முருகன்? என்ன காரணம்?












Click it and Unblock the Notifications