For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

திமுக: என்.வி.என் சோமுவின் மகள் டாக்டர் கனிமொழி தி.நகரில் போட்டி!

Google Oneindia Tamil News

சென்னை: மறைந்த முன்னாள் திமுக எம்.பி. என்.வி.என்.சோமுவின் மகள் டாக்டர் என்.வி.என். கனிமொழி தி.நகரில் திமுக சார்பில் போட்டியிடவுள்ளார்.

வட சென்னை லோக்சபா தொகுதியில் திமுக சார்பில் 1984, 1996 ஆகிய ஆண்டுகளில் எம்.பியாக இருந்தவர் சோமு. மறைந்த திமுக தலைவர் என்.வி. நடராஜனின் மகன். நடராஜன் மத்திய அமைச்சராக இருந்தவர்.

NVN Somu's daughter gets seat in T Nagar

சோமுவின் மகள்தான் டாக்டர் கனிமொழி. அவருக்கு தி.நகரில் சீட் கொடுத்துள்ளது திமுக. சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரியில் படித்தவர் கனிமொழி. தற்போது அப்பல்லோ மருத்துவமனையில் பணியாற்றி வருகிறார்.

3வது தலைமுறை திமுககாரர் கனிமொழி. இவரது தாத்தா நடராஜன் மத்திய அமைச்சராக இருந்த பெருமை படைத்தவர். தந்தை சோமு திமுகவில் முக்கியப் புள்ளியாக விளங்கியவர். தற்போது இந்த வரிசையில் கனிமொழியும் இணைகிறார்.

இத்தொகுதியில் அதிமுக சார்பில் சத்தியநாராயணன் போட்டியிடுகிறார். பாஜக சார்பில் எச். ராஜா போட்டியிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Late DMK leader NVN Somu's daughter Dr NVN Kaniozhi has been ticket in T Nagar as DMK candidate.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X