திமுகவின் சதிக்கு ஓ.பன்னீர்செல்வம் பலியாகிவிட்டார்- நாஞ்சில் சம்பத்
திமுகவின் சதிக்கு ஓ.பன்னீர்செல்வம் பலியாகிவிட்டதாக அதிமுக செய்தி தொடர்பாளர் நாஞ்சில் சம்பத் குற்றம்சாட்டியுள்ளார்.
Subscribe to Oneindia Tamil
சென்னை: அதிமுக செய்தி தொடர்பாளர் நாஞ்சில் சம்பத், ஓ.பன்னீர்செல்வம் திமுகவின் சதிக்கு பலியாகி விட்டதாக தெரிவித்துள்ளார். ஓபிஎஸ் பேட்டியளித்த சற்று நேரத்திலேயே ஸ்டாலின் தொலைபேசி வாயிலாக தொலைக்காட்சிகளுக்கு பேட்டி கொடுத்ததையும் அவர் சுட்டிக்காட்டினார்.
முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று இரவு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்ததில் இருந்த தமிழக அரசியல் களம் பெரும் பரபரப்புடன் காணப்படுகிறது. இந்நிலையில் அதிமுக தலைமைக் கழகத்தில் அக்கட்சியின் செய்தி தொடர்பாளர் நாஞ்சில் சம்பத் செய்தியாளர்களிடம் பேசினார்.

அப்போது திமுகவின் சதிக்கு ஓ.பன்னீர்செல்வம் பலியாகிவிட்டதாக அவர் கூறினார். ஓபிஎஸ் பேட்டியளித்த சற்று நேரத்திலேயே ஸ்டாலின் தொலைக்காட்சிகளுக்கு தொலைபேசி வாயிலாக பேட்டியளித்ததில் இருந்ததே அதனை தெரிந்துகொள்ள முடியும் என்றும் நாஞ்சில் சம்பத் கூறினார்.












Click it and Unblock the Notifications