பிரதமர் மோடியின் அறிவுறுத்தலில்தான் துணை முதல்வரானேன்: ஓபிஎஸ் பகிரங்க ஒப்புதல் வாக்குமூலம்
பிரதமர் நரேந்திர மோடியின் அறிவுறுத்தலாலேயே கட்சியில் மீண்டும் சேர்ந்ததாக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
Recommended Video

தேனி : பிரதமர் நரேந்திர மோடியின் அறிவுறுத்தலாலேயே கட்சியில் மீண்டும் இணைந்ததாக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார். அமைச்சர் பதவி வேண்டாம் என்று சொன்ன போதும் பிரதமர் கூறியதாலேயே தற்போது அமைச்சரவையில் இடம்பெற்றுள்ளதாகவும் அவர் பகிரங்கமாக தெரிவித்துள்ளார்.
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாள் விழா கொண்டாடுவது குறித்த ஆலோசனைக்கூட்டம் தேனியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வம், கம்பம் எம்.எல்.ஏ ஜக்கையன், தேனி எம்.பி.பார்த்திபன், முன்னாள் எம்.பி சையதுகான் உள்ளிட்டோர் இந்த கூட்டத்தில் பங்கேற்றனர்.
கூட்டத்தில் பேசிய துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பகிரங்கமாக சில உண்மைகளை ஒப்பு கொண்டுள்ளார். அதில் பாரத பிரதமரை மரியாதை நிமித்தமாக நான் சந்தித்தேன்.

பிரதமர் கூறியதால்
அப்போது பிரதமர் என்னிடம் சொன்னது என்னவென்றால் நான் சென்னையில் நான் ஜெயலலிதாவை சந்தித்து அவர் என்னிடம் நிறைய பேசி இருக்கிறார். இப்போது இருக்கும் சூழ்நிலையில் கட்சியை காப்பாற்றுவதற்கு நீங்கள் இணைய வேண்டும் என்று சொன்னார்.

கட்சிப்பதவியே போதும் என்றேன்
நானும் சரி என்று ஒப்புகொண்டேன். ஆனால் எனக்கு மந்திரி பதவி வேண்டாம் கட்சியில் மட்டுமே பதவி வேண்டும் என்று சொன்னேன்.

பிரதமர் வற்புறுத்தலால்
ஆனால் பிரதமர் இல்லை, இல்லை நீங்கள் அமைச்சரவையில் பொறுப்பு ஏற்க வேண்டும் என்று என்னிடம் கூறினார். அதனால் தான் நான் துணை முதல்வர் பொறுப்பில் இருக்கிறேன்.

அமைச்சர்களும் ஆதரித்தனர்
நான் பிரதமர் சொன்னது குறித்து என்னுடைய சக அமைச்சர்களான வேலுமணி, தங்கமணியிடம் சொன்னேன். அவர்களும் நீங்கள் எங்களுடன் அமைச்சரவையில் இருக்க வேண்டும் என்று சொன்னார்கள்.

2 முறை முதல்வராக இருந்திருக்கிறேன்
இவர்கள் அனைவரும் சொன்னதால் தான் நான் அமைச்சராக இருக்கிறேன், மற்றபடி எனக்கு அமைச்சராகும் ஆசையெல்லாம் இல்லை. இரண்டு முறை ஜெயலலிதா என்னை முதல்வராக்கி இருக்கிறார் அந்த பெருமையே எனக்கு போதும் என்றும் ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications