Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஆட்சியை கலைக்க திட்டம்.. தினகரனை சந்திக்க ஓ.பி.எஸ் நேரம் கேட்டார்.. தங்க தமிழ்ச்செல்வன் பரபரப்பு!

கடந்த வாரம் டிடிவி தினகரனை சந்திக்க துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நேரம் கேட்டார் என்று தங்க தமிழ்ச்செல்வன் பேட்டியளித்துள்ளார்.

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    டிடிவி தினகரனை சந்திக்க துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நேரம் கேட்டார் -தங்க தமிழ்ச்செல்வன்

    சென்னை: கடந்த வாரம் டிடிவி தினகரனை சந்திக்க துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நேரம் கேட்டார் என்று தங்க தமிழ்ச்செல்வன் பேட்டியளித்துள்ளார்.

    தனியார் தொலைக்காட்சியில் நடந்த விவாத நிகழ்ச்சியில் அவர் இந்த பேட்டியை அளித்துள்ளார். திருவாரூர் மற்றும் திருப்பரங்குன்றம் தேர்தலுக்காக தமிழகத்தில் அனைத்து கட்சிகளும் தயாராகி வருகிறது.

    இந்த நிலையில் டிடிவி தினகரன் ஆதரவாளர் தங்க தமிழ்ச்செல்வன் பரபரப்பு பேட்டி அளித்துள்ளார். கடந்த ஆண்டு டிடிவி தினகரனும் ஓ.பி.எஸ்ஸும் சந்தித்தனர் என்றும் கூறியுள்ளார்.

    கடந்த வருடம் சந்தித்தார்கள்

    கடந்த வருடம் சந்தித்தார்கள்

    அவர் தனது பேட்டியில், டிடிவி தினகரனும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் கடந்த வருடமே சந்தித்து இருக்கிறார்கள். 2017 ஜூலை 12-ம் தேதி இந்த சந்திப்பு நடந்தது. கோட்டூர்புரம் இல்லத்தில் இருவரும் சந்தித்துக் கொண்டனர். இதில் ஆட்சி கவிழ்ப்பு குறித்து பேசப்பட்டது.

    கடந்த வருடம் சந்தித்தார்கள்

    கடந்த வருடம் சந்தித்தார்கள்

    அவர் தனது பேட்டியில், டிடிவி தினகரனும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் கடந்த வருடமே சந்தித்து இருக்கிறார்கள். 2017 ஜூலை 12-ம் தேதி இந்த சந்திப்பு நடந்தது. கோட்டூர்புரம் இல்லத்தில் இருவரும் சந்தித்துக் கொண்டனர். இதில் ஆட்சி கவிழ்ப்பு குறித்து பேசப்பட்டது.

    ஆதாரம் உள்ளது

    ஆதாரம் உள்ளது

    இதற்கான ஆதாரம் என்னிடம் உள்ளது. ஓ.பன்னீர்செல்வத்தின் உறவினர் இப்போதும் கூட தினகரனுடன் பேசிக்கொண்டுதான் இருக்கிறார். தினகரனும், ஓ.பன்னீர்செல்வமும் சந்திப்பு நடத்தியதற்கு என்னிடம் ஆதாரம் உள்ளது. அவர்கள் சந்திப்பு நடத்திய இடத்தில் சிசிடிவி கேமரா இருந்தது, அந்த ஆதாரம் என்னிடம் உள்ளது. உரிய நேரத்தில் அதை கொடுப்பேன்.

    ஒரு வாரம் முன்

    ஒரு வாரம் முன்

    டிடிவி தினகரனை சந்திக்க ஓ.பி.எஸ் நேரம் கேட்டு இருந்தார். கடந்த வாரம் தினகரனை சந்திக்க ஓ.பி.எஸ் நேரம் கேட்டார். எடப்பாடி ஆட்சியை கலைப்பது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த முயன்றார்.

    சந்திப்பு நடக்கவில்லை

    சந்திப்பு நடக்கவில்லை

    ஆனால் இந்த சந்திப்பு நடக்கவில்லை. விரைவில் இவர்கள் சந்திக்க வாய்ப்புள்ளது. ஆட்சியை கலைப்பதற்காகத்தான் அவர் இந்த சந்திப்பிற்கு அனுமதி கேட்டார். ஆனால் கடந்த வாரம் தினகரன் ஓ.பி.எஸ் சந்திப்பு நடக்கவில்லை என்று டிடிவி தினகரன் ஆதரவாளர் தங்க தமிழ்ச்செல்வன் பரபரப்பு பேட்டி அளித்துள்ளார்.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+