அவை முன்னவர் பதவியிலிருந்து செங்கோட்டையன் நீக்கம்... துணை முதல்வர் ஓபிஎஸ் மீண்டும் நியமனம்
தமிழக சட்டசபையின் அவை முன்னவராக துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் நியமிக்கப்பட்டுள்ளார்.
Recommended Video

சென்னை: தமிழக சட்டசபையின் அவை முன்னவராக துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார். செங்கோட்டையனிடம் இருந்த இந்த பதவி பறிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
கடந்த 2011- 16 வரை ஜெயலலிதா ஆட்சி காலத்தில் சட்டசபையின் அவை முன்னவராக ஓ.பன்னீர் செல்வம் செயல்பட்டு வந்தார். இந்நிலையில் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு, அதிமுக இரண்டாக பிளவுப்பட்டதால் அந்த பதவி ஓபிஎஸ்ஸிடம் இருந்து பறிக்கப்பட்டது.
பின்னர் சசிகலா ஆதரவாளரான செங்கோட்டையன் நியமிக்கப்பட்டார். அவர்இ இதுவரை இரு கூட்டத்தொடர்களை நடத்தியுள்ளார். இந்நிலையில் அதிமுகவின் இரு அணிகளும் இணைந்துவிட்டன. துணை முதல்வராக ஓபிஎஸ் பதவியேற்றுக் கொண்டார்.

8-ஆம் தேதி சட்டசபை
மேலும் கட்சி சார்பில் ஒருங்கிணைப்பாளர் பொறுப்பும் அவருக்கு வழங்கப்பட்டு நிலையில் செங்கோட்டையனிடம் இருந்த அவை முன்னவர் பதவி தற்போது ஓ.பன்னீர்செல்வத்துக்கே மீண்டும் வழங்கப்பட்டுள்ளது. சட்டசபை வரும் 8-ஆம் தேதி கூடும் நிலையில் இதுபோன்ற நியமனம் செய்யப்பட்டுள்ளது.

முன்வைக்கும் கேள்விகள்
அவை முன்னவர் பதவி என்பது எதிர்கட்சி உறுப்பினர்கள் கேட்கும் துறை சார்ந்த கேள்விகளுக்கு அமைச்சர்கள் பதிலளிப்பர். ஆனால் அவர் முன்வைக்கும் கட்சி ரீதியிலான கேள்விகளுக்கு அவை முன்னவர்தான் பதிலளிக்க முடியும்.

தீர்மானங்கள் முன்மொழிதல்
ஒரு உறுப்பினர் பேசி கொண்டிருக்கும்போதே குறுக்கிட்டு பேச அவை முன்னவருக்கு அதிகாரம் உள்ளது. மேலும் அரசு சார்பில் எடுக்கப்படும் தீர்மானங்களையும் அவை முன்னவரே முன்மொழிவார். அதிமுக இணைந்த பிறகு ஓபிஎஸ்ஸுக்கு நாளுக்கு நாள் முக்கியத்துவம் கூடி வருகிறது.

அதிமுக அதிருப்தி
அதிமுகவின் அணிகள் இணைந்த பிறகு, செய்தியாளர்கள் கேட்கும் கேள்விகளுக்கு துறை சார்ந்தவைக்கு மட்டுமே பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் பதிலளித்து வந்தார். மற்றபடி யாரையும் விமர்சனம் செய்து அவர் பதிலளிக்கவில்லை என்பது அதிமுகவினரிடையே அதிருப்தி நிலவி வந்தது குறிப்பிடத்தக்கது.
-
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்!












Click it and Unblock the Notifications