கருகிய பயிர்களுக்கு… விவசாயிகளுக்கு நிவாரணம்.. வறட்சி குறித்து முதல் முறையாக வாய் திறந்த தமிழக அரசு
பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்கப்படும் என்று ஓ. பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார். அதற்கான ஆய்வு பணிகளை மேற்கொள்ள ஆட்சியர்களுக்கு அவர் உத்தரவிட்டுள்ளார்.
சென்னை: காய்ந்து, கருகி, கிட்டத்தட்ட 80 உயிர்கள் போன பிறகு தற்போதுதான் தமிழக அரசு அறிவித்துள்ளது விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்கப்படும் என்று. அதற்கான ஆய்வுகளை செய்ய மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உத்தரவிட்டுள்ளார்.
கர்நாடக மாநிலத்தில் இருந்து காவிரி நீர் உரிய முறையில் தமிழகத்திற்கு கிடைக்கவில்லை. வடகிழக்கு பருவமழையும் போதுமான அளவு பெய்யவில்லை. இதனால் காவிரி டெல்டா மாவட்டங்கள் உள்ளிட்ட தென் மாவட்டங்களில் பயிர்கள் கருகி நாசமாகின. அதுஏற்படுத்திய மன வேதனையில் சுமார் 80 பேர் வரை மரணம் அடைந்துள்ளனர்.

இந்நிலையில், தமிழகத்தை வறட்சி மாநிலமாக அறிவிக்க வேண்டும் என்று திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும், விவசாய அமைப்புகளும் கோரிக்கை விடுத்து போராடி வந்தன.
இதனையடுத்து, தமிழக அரசு வறட்சி பாதித்த பகுதிகளை ஆய்வு செய்ய குழு அமைத்துள்ளது. ஜனவரி 9ம் தேதி வரை மாவட்ட ஆட்சியர்கள் வறட்சி குறித்த ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் ஆய்வு அறிக்கையை 10ம் தேதி அரசிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும் முதல்வர் ஓபிஎஸ் உத்தரவிட்டுள்ளார்.
மாவட்டந்தோறும் நடத்தப்படும் ஆய்வின் அடிப்படையில் கொடுக்கப்படும் அறிக்கையின்படி பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்கப்படும் என்றும் பயிர் காப்பீட்டு விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்கப்படும் என்றும் முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் அறிவித்துள்ளார்.
எனினும், பயிர்கள் கருகிய அதிர்ச்சியில் தற்கொலை செய்து கொண்டும், மாரடைப்பால் மரணமடைந்தும் உள்ள விவசாயிகளின் குடும்பங்களுக்கு நிவாரணம் கொடுப்பது தொடர்பாக தமிழக அரசு எதுவும் தெரிவிக்கவில்லை என்பது விவசாயிகளிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications