ஆர்.கே.நகர் இடைத்தேர்தல்.. ஓபிஎஸ் அணியின் ஒற்றை இலக்கு இதுதான்!
ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் சசிகலா அணியை தோற்கடிப்பது மட்டுமே தமது அணியின் இலக்காக இருக்க வேண்டும் என முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சென்னை: ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் சசிகலா அதிமுகவை தோற்கடிக்க வேண்டும் என்பது மட்டுமே தங்களது அணியின் ஒற்றை இலக்காக இருக்க வேண்டும் என முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சென்னை போயஸ்கார்டன் வீனஸ் காலனியில் குடியேறியுள்ள ஓ. பன்னீர்செல்வம் அங்கு தமது ஆதரவாளர்களிடம் பேசியதாவது:

ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் தீபா போட்டியிட்டாலும் அவரை பற்றி எந்த ஒரு விமர்சனமும் செய்ய வேண்டாம். நமக்கு முதல் பணியே சசிகலா அணியை தோற்கடிக்கச் செய்ய வேண்டும் என்பதுதான். அதன்பின்னர் திமுகவை வீழ்த்த வேண்டும்.
இந்த தேர்தலில் இரட்டை இலை கிடைக்குமா? இல்லையா? என்றெல்லாம் யோசிக்க வேண்டாம். சசிகலாவின் நியமனம் செல்லாது என தேர்தல் ஆணையம் அறிவித்துவிட்டாலே கட்சியும் இரட்டை இலை சின்னமும் நமக்குதான் சொந்தமாகிவிடும்.
அதைப்பற்றியெல்லாம் கவலைப்படாமல் நாம் தேர்தல் பணியாற்ற வேண்டும். சசிகலா அணியினர் 32 அமைச்சர்களையும் ஆர்.கே.நகரில் இறக்கி அனைத்து முறைகேடுகளிலும் ஈடுபடுவர். அதை முறியடித்தாக வேண்டும்.
இவ்வாறு ஓ.பன்னீர்செல்வம் பேசினார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications