ஆட்சி அமைக்க உரிமை கோரிய எடப்பாடி பழனிச்சாமிக்கு அதிரடி செக் வைத்த ஓபிஎஸ்!
ஆட்சி அமைக்க உரிமை கோரிய எடப்பாடி பழனிச்சாமிக்கு முதல்வர் ஓபிஎஸ் அதிரடியாக செக் வைத்துள்ளார். இதனால் ஆளுநர் உடனே எடப்பாடி பழனிச்சாமியை ஆட்சி அமைக்க அழைக்க மாட்டார் என கூறப்படுகிறது.
சென்னை: ஆளுநரிடம் எடப்பாடி பழனிச்சாமி கொடுத்திருக்கும் ஆதரவு எம்.எல்.ஏக்களில் பலரும் தம்முடைய ஆதரவு எம்.எல்.ஏக்கள் என முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் கடிதம் அனுப்பியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
அதிமுக சட்டசபை குழு தலைவராக எடப்பாடி பழனிச்சாமி தேர்வு செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து சசிகலாவின் அக்காள் மகன் டிடிவி தினகரன் உள்ளிட்டோருடன் ஆளுநர் வித்யாசாகர் ராவை நேரில் சந்தித்து எடப்பாடி பழனிச்சாமி ஆட்சி அமைக்க உரிமை கோரினார்.

எடப்பாடி பழனிச்சாமி அண்ட் கோ ஆளுநர் மாளிகையை விட்டு கிளம்பிய பின்னர் ஓபிஸ் அணி உள்ளே நுழைந்தது. ராஜ்யசபா எம்பி மைத்ரேயன், மனோஜ் பாண்டியன் இருவரும் ஆளுநரை சந்தித்தனர்.
இச்சந்திப்பின் போது முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் கொடுத்த ஒரு கடிதம் ஆளுநரிடம் கொடுக்கப்பட்டது. அதில் எடப்பாடி பழனிச்சாமி அளித்திருக்கும் அதிமுக ஆதரவு எம்.எல்.ஏக்கள் பட்டியலில் தமது ஆதரவு எம்.எல்.ஏக்கள் அதிகம் இருக்கின்றனர்; ஆகையால் எடப்பாடி பழனிச்சாமியை ஆட்சி அமைக்க அழைக்கக் கூடாது என அதில் வலியுறுத்தி இருக்கிறார்
முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்தின் இந்த அதிரடியால் எடப்பாடி பழனிச்சாமியை ஆட்சி அமைக்க ஆளுநர் அழைப்பாரா? என்பது கேள்விக்குறியாகி உள்ளது.
-
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்?












Click it and Unblock the Notifications