ராஜினாமா பரபரப்பு.... ஓபிஎஸ் போலவே உம்மனா மூஞ்சியாகவே இருந்த தேனிமாவட்டம்
முதல்வர் பதவியில் இருந்து ஓ. பன்னீர்செல்வம் ராஜினாமா செய்தபோதும் அவரது சொந்த மாவட்டம் எந்த ஒரு பதற்றமும் இல்லாமல் அமைதியாகவே இருந்தது.
சென்னை: முதல்வர் பதவியில் இருந்து ராஜினாமா செய்த ஓ. பன்னீர்செல்வத்தின் தேனி மாவட்டம் எந்த ஒரு ரியாக்ஷனையும் காட்டாமல் இயல்பு வாழ்க்கையில் மூழ்கிக் கிடந்தது.
சசிகலாவுக்காக முதல்வர் பதவியை நேற்று ராஜினாமா செய்தார் ஓ. பன்னீர்செல்வம். இதையடுத்து ஓ. பன்னீர்செல்வத்தின் தேனி மாவட்டத்தில் பதற்றம் நிலவுவதாக வதந்திகள் பரவின.

இயல்பு வாழ்க்கை
ஆனால் தேனி மாவட்டத்தின் பல பகுதிகள் இந்த மாற்றம் தொடர்பாக எந்த ஒரு ரியாக்ஷனையும் காட்டாமல் இயல்பாகவே இருந்தது. கூடலூர், கம்பம், சின்னமனூர், உத்தமபாளையம், தேனி பகுதிகளில் வழக்கம்போல இயல்பு வாழ்க்கை இருந்தது.

டீ கடையில்...
ஓ. பன்னீர்செல்வத்தின் பெரியகுளத்தில் மட்டும் அதிமுக கரைவேட்டி நபர்கள் கூட்டம் கூட்டமாக நின்று கொண்டிருந்தனர். அதேநேரத்தில் ஓ. பன்னீர்செல்வத்துக்கு சொந்தமான டீ கடையில் எந்த ஒரு டென்சனுமே இல்லாமல் விறுவிறுப்பாக வியாபாரம் 'ஆவிபறக்க' நடந்து கொண்டிருந்தது.

அதிருப்தி
இருந்தபோதும் ஓ. பன்னீர்செல்வம் ராஜினாமா செய்ய வைக்கப்பட்டதில் பொதுமக்களிடையே கடும் அதிருப்தி நிலவுகிறது. இந்த அதிருப்தியை எப்படி எந்த வகையில் வெளிப்படுத்துவது என்பது தெரியாமல் விழிபிதுங்கி நிற்கின்றனர்.

வெளியே காட்டுவோம்
நிச்சயம் உள்ளாட்சி தேர்தலில் ஓ. பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் தங்களது அதிருப்தியை வெளிப்படுத்த கூடும். குறிப்பாக சசிகலா போட்டியிடும் தொகுதியில் அவரை தோற்கடிக்கும் உள்ளடி வேலைகளில் இறங்குவோம் என்கின்றனர் ஓ. பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள்.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications