ஓபிஎஸின் கருத்து மனவேதனையை தரும்.. பேச்சுவார்த்தை குழு கலைக்கப்பட்டது குறித்து பொள்ளாச்சி ஜெயராமன்!
ஓபிஎஸின் கருத்து அதிமுக தொண்டர்களுக்கு மனவேதனையை தரும் என பேச்சுவார்த்தை துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் தெரிவித்துள்ளார்.
சென்னை: ஓ.பன்னீர்செல்வத்தின் கருத்து அதிமுக தொண்டர்களுக்கு மன வேதனையை தரும் என பொள்ளாச்சி ஜெயராமன் தெரிவித்துள்ளார். பேச்சுவார்த்தை குழு கலைக்கப்பட்டது குறித்து துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இரு அணிகள் இணைப்புக்கான பேச்சு வார்த்தைக்காக அமைக்கப்பட்ட குழு கலைக்கப்படுவதாக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று அறிவித்தார். பேச்சுவார்த்தை நடத்துவதாக எடப்பாடி அணியினர் நாடகமாடுவதாகவும் குற்றம்சாட்டினார்.
இந்நிலையில் ஓபிஎஸின் நிலைப்பாடு குறித்து துணை சபாநாயகரான பொள்ளாச்சி ஜெயராமன் கருத்து தெரிவித்துள்ளார். அடிமட்ட தொண்டன், உண்மையான தொண்டன் மத்தியில் ஓ.பன்னீர் செல்வத்தின் கருத்து மன வேதனையை ஏற்படுத்தும் என்று அவர் கூறியுள்ளார்.

எம்ஜிஆரும், ஜெ.வும் குல தெய்வம்
தொடர்ந்து 45 ஆண்டுகளாக காப்பாற்ற உழைத்தவர்களுக்கு இந்த சின்னத்தை மீட்க வேண்டும் என்பதே குறிக்கோளாக உள்ளது என்றும் பொள்ளாச்சி ஜெயராமன் கூறியுள்ளார். மேலும் உண்மையான அ.தி.மு.க. தொண்டர்களுக்கு தங்களது குலதெய்வத்திற்கு அடுத்தபடியாக எம்.ஜி. ஆரும், ஜெயலலிதாவும் தான் குலதெய்வமாக உள்ளனர் என்றும் அவர் கூறினார்.

இரட்டை இலை குலச்சின்னம்
இரட்டை இலையை குலச் சின்னமாக கருதுகிறார்கள் என்றும் அவர் தெரிவித்தார். ஜெயலலிதா தனக்கு பிறகும் 100 ஆண்டுகள் அ.தி.மு.க.வும், ஆட்சியும் தொடரும் என்றதையும் அவர் நினைவு கூர்ந்தார்.

ஜெ.ஆன்மா மன்னிக்காது
ஜெயலலிதா சொன்னதை மனதில் வைத்து அனைவரும் செயல்படவேண்டும் என துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் வலியுறுத்தினார். இதற்கு இடையூறாக இருப்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதாவின் ஆன்மா மன்னிக்காது என்றும் அவர் கூறினார்.

ஒற்றுமையாக செயல்படவேண்டும்
இரட்டை இலைச் சின்னத்தை மீட்க அனைவரும் ஒன்றுபட்டு செயல்பட வேண்டும் என்றும் பொள்ளச்சி ஜெயராமன் கோரிக்கை விடுத்தார். அ.தி.மு.க. ஆட்சி இருக்கும் போதே இதற்கான செயலில் அனைவரும் ஒற்றுமையாக செயல்படவேண்டும் என்றார்.

கண்கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம்
கண்கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் செய்தால் எந்தவித பலனும் இல்லை என்றும் அவர் கூறினார். ஓ.பன்னீர்செல்வம் கருத்துக்கு என்ன செய்வது என்பது குறித்து முதல்வரும் மேல்மட்ட நிர்வாகிகளும் ஆலோசனை செய்து முடிவு செய்வார்கள் என்றும் பொள்ளாச்சி ஜெயராமன் தெரிவித்தார்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications