தீபாவுக்கு ஓ.பி.எஸ் அழைப்பு! அதிமுக தொண்டர்கள் உற்சாகம்.. ஸ்வீடு எடு கொண்டாடு!
சென்னை: முதல்வர் பன்னீர்செல்வம் கிரீன்வேஸ் சாலையிலுள்ள தனது இல்லத்தில் நிருபர்களிடம் கூறியதாவது: என்னுடைய அரசியல் வாழ்க்கையில் தவறு செய்ததாக ஒருபோதும் பெயர் வாங்கியதில்லை. இப்போது புதிதாக அவர்கள் ஒரு புரளியை சொல்லி வருகிறார்கள். காலம்தான் உரிய பதில் சொல்லும். சட்டசபை கூடியபிறகு எனக்கு உள்ள ஆதரவை எம்.எல்.ஏக்கள் நிரூபிப்பார்கள். ராஜினாமாவை திரும்ப பெற கட்டாய சூழல் ஏற்பட்டால் திரும்ப பெறுவேன்.
பொதுமக்களை வீதி வீதியாக சென்று, கிராமம், கிராமமாக, மாவட்ட வாரியாக சந்தித்து பேசப்போகிறேன் என்றார். தீபா குறித்த கேள்விக்கு, "அவர்கள் எல்லாம் மரியாதைக்கு உரியவர்கள். மாண்புமிகு அம்மாவுடைய அண்ணன் பிள்ளைகள். எப்போதுமே அவர்களுக்கு மதிப்பு கொடுத்துள்ளேன்" என்றார். உங்களுடன் இணைந்து பணியாற்ற தீபாவுக்கு அழைப்பு விடுப்பீர்களா என்ற கேள்விக்கு, "கட்டாயமாக" என கூறினார் ஓ.பன்னீர்செல்வம்.

இதன்மூலம், தீபா பக்கம் சாய்ந்த அதிமுக தொண்டர்களுக்கு இப்போது யானை பலம் கிடைத்தது போன்ற உணர்வு ஏற்பட்டுள்ளது. தீபா ஆதரவாளர்கள் இனிப்புகள் கொடுத்து கொண்டாடி வருகிறார்கள். அதிமுகவை மன்னார்குடி குடும்பத்திடமிருந்து காப்பாற்ற ஜெயலலிதாவின் விசுவாசி பன்னீர்செல்வம் மற்றும் ஜெயலலிதா அண்ணன் மகள் தீபா இணைந்து செயல்படுவார்கள் என்ற நம்பிக்கை அதிமுகவினரிடம் ஏற்பட்டுள்ளது.
-
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக












Click it and Unblock the Notifications