பல்லு இல்லாட்டியும் பரவாயில்லை... பான் கார்டு இருக்கணும் பாட்டி- "ஓ.ஏ.பி" வாங்கும் முதியோர் நிலை இது
சென்னை: தமிழகத்தின் கடைக்கோடி கிராமம் ஒன்றில் வசித்து வரும் அந்தப் பாட்டி முதியோர் இல்லம் ஒன்றில் வசித்து வருகிறார்.
கணவர் இறந்த பிறகு அடைக்கலம் தேட பிள்ளைகள் இல்லாத நிலையில் அவருக்கு சோறு போட்டுக் கொண்டிருப்பது அந்த முதியோர் இல்லமும், அரசு வழங்கி வருகின்ற ஓ.ஏ.பி எனப்படும் முதியோர் உதவித் தொகையும்தான்.
வருகின்ற 1000 ரூபாயில்தான் அவருடைய ஒரு மாதக் கஞ்சியும், மற்ற செலவுகளும் ஓடிக் கொண்டிருக்கின்றது. அதற்கும் வந்தது ஒரு பிரச்சினை.
முதலில் ஏற்கனவே இருந்த முகவரி மாற்றத்திற்காக ஓ.எ.பி பென்சன் கட் ஆனது. மீண்டும் யார் யாரிடமோ கெஞ்சி மீண்டும் அப்ளை செய்து வங்கியில் கணக்கு ஆரம்பிக்கச் சென்றவருக்கு அங்கும் காத்திருந்தது ஒரு பெரிய அதிர்ச்சி.

நம்பர் இருந்தா உள்ள வா:
"பாட்டி அக்கவுண்ட் ஆரம்பிக்கணும்னா பான் கார்டு நம்பர் கண்டிப்பா வேணும்..போய் ஆரம்பிச்சுட்டு வா" என்றிருக்கின்றார் அந்த "கடமை" தவறதா ஊழியர்.

வந்தாதான் உனக்கு சோறு:
"நான் என்னத்தப்பா பான் கார்டெல்லாம் கண்டேன்" என்ற பாட்டியிடம் "அதெல்லாம் தெரியாது பான் கார்டு நம்பரோட வந்தாதான் அக்கவுண்ட்" என்றிருக்கிறார் அவர். அந்த பாட்டி பாவம் கிடைத்த மாச வருமானமும் போய் தவிப்பில் இருக்கிறார்.

கதறும் முதியவர்கள்:
இது யாரோ ஒருவரின் நிலை கிடையாது. காலம் போன கடைசியில் கஞ்சிக்கு வழியின்றி தெருவில் நிற்கும் முக்கால்வாசி முதியோரின் நிலை இன்று இதுதான்.

போவதே இல்லை:
இன்னும் பலருக்கு "ஓ.ஏ.பி" என்றாலே என்னவென்று தெரிவதில்லை பாவம். இதில் சில இடங்களில் ஓ.ஏ.பி ஒழுங்காக முதியோருக்கு சென்றடைவதுமில்லை.

ஓ.ஏ.பி என்றால் என்ன?
கணவன் அல்லது மனைவி போன்ற மிக நெருங்கிய உறவுகள் இல்லாமல் இருப்பவர்கள், மிக நெருங்கிய உறவுகள் அல்லது பிள்ளைகள் இருந்தும் அவர்கள் ஆதரவு கிடைக்காமல் துன்பப்படும் அறுபது வயதுக்கு மேற்பட்ட அனைவரும் ஆதரவற்ற முதியோர் என்று குறிப்பிடப்படுகின்றனர்.அறுபது வயதிற்கு மேற்பட்ட மக்கள் மற்றும் எவாின் ஆதரவுமின்றி வாழும் முதியோர்களுக்கு மாதம் ரூபாய் 1000 வீதம் வழங்கப்படுகிறது.

ஈசியாக கிடைக்காது:
ஆனால், இதைப் பெறுவதற்கான விதிமுறைகளும் கொஞ்ச நஞ்சமல்ல. இதில் பலருக்கும் அந்த முதியவர்கள் படியளக்க வேண்டும். அப்போதுதான் அந்த 1000 ரூபாய் பணம் கிடைக்கும்.

கிடைப்பது குதிரைக் கொம்பு:
இதில், லட்ச லட்சமாய் பணம் போடுபவர்களின் கால்களில் விழுந்து, ஜூஸ் வாங்கிக் கொடுத்து உபசரிக்கும் வங்கிகள், இது போன்ற ஏழைகளிடம் காட்டுவதோ பாராமுகம்தான்.

என்னயா உங்க நீதி?:
வெறும் 1000 ரூபாய் பணத்திற்கு நாயாய், பேயாய் அலைந்தால் பாவம் கடைசியாய் பான் கார்டு அந்தக் கார்டு இந்தக் கார்டு என்று ஒரு வேளை சோற்றுக்கும் ஆப்பு வைக்கும் இந்த டப்பா சட்டத் திருத்தங்கள் மாறினால் மட்டுமே நாடு வல்லரசாகும். இதில் ஆளும் மத்திய அரசினர் வேறு அடித்தட்டு வர்க்கத்தினர் அனைவருக்கும் அக்கவுண்ட் என்று கொஞ்ச நாள் கூவிக் கொண்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
பால் கார்டுக்கே வழியில்லாதவர்களிடமும் பான் கார்டு இருக்க வேண்டும் என்பதுதான் இன்றைய அரசின் வளர்ச்சியாம் என்னவோ போங்கப்பா...!
-
எவ்வளவு வேகம்! சிட்டிக்கு நடுவே வளர்ந்து நிற்கும் ஸ்டீல் ராட்சசன்.. சென்னையின் காஸ்ட்லி ப்ராஜெக்ட் -
Gold Price: ஒரே நாளில் 3,040 அதிகரிப்பு.. மீண்டும் உச்சம் தொடும் தங்கம் விலை.. அம்மாடியோவ்! நகை பிரியர்கள் ஷாக் -
Low Pressure: காற்றழுத்த தாழ்வு பாதையால் நடக்கும் மேஜிக்! தென் கடலோர மாவட்டங்களில் பிச்சு உதறப் போகுது மழை! -
ரயில் டிக்கெட், பான் கார்டு.. இன்று முதல் மொத்தமாக மாறும் ரூல்ஸ்.. மக்களே இது தெரியாமல் இருக்காதீங்க -
Gold price: மீண்டும் அதிரடியாக குறைந்த தங்கம் விலை.. நகை பிரியர்கள் ஹேப்பி.. ஒரு சவரன் ரேட் என்ன? -
கிளாம்பாக்கம் - மகேந்திரா வேர்ல்ட் சிட்டி.. சென்னையின் மிகப்பெரிய ப்ராஜெக்ட்.. எல்லாமே மாறப்போகுது -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
முடங்கும் துபாய், அபுதாபி! அடியோடு மங்கும் தங்கம் மார்க்கெட்! ஆடிப்போன இந்திய ஜுவல்லரி நிறுவனங்கள் -
மனைவி தனது பெற்றோரிடமிருந்து பெற்ற சொத்தில் கணவருக்கு உரிமை உண்டா? ஐகோர்ட் தீர்ப்பு முழு விவரம் -
சென்னை இளைஞர் கொடைக்கானலுக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல்












Click it and Unblock the Notifications