”நிறுத்தப்பட்ட பென்சனால் அவதிக்கு உள்ளாகும் முதியோர்..”
சென்னை: உதவி தொகை உதவாத தொகையாக போனதால் வேதனையில் குமுறுகின்றனர் ஆதரவற்ற முதியோர் பலர்.
குடும்பத்தினரால் கைவிடப்படும் முதியோரின் இறுதிக்கால வாழ்க்கைக்கு உதவ மத்திய மாநில அரசுகளின் பங்களிப்பில் முதியோர் உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது.
இத்தொகை மாதத்திற்கு 500 ரூபாயாக இருந்த போது இத்திட்டத்தில் பயனாளிகளின் எண்ணிக்கை குறைவாக இருந்தது.

திசை மாறிப் போன திட்டம்:
இந்நிலையில் உதவித்தொகையை ஆயிரம் ரூபாயாக மாநில அரசு உயர்த்தியதும் திட்டத்தின் நோக்கமே திசைமாறிப்போனது.

மீறப்பட்ட அரசு விதிகள்:
திட்ட பயனாளிகளை தேர்வு செய்ய அரசு விதிமுறைகள் அனைத்தும் மீறப்பட்டது. ஒவ்வொரு கிராமங்களிலும் அரசியல்வாதிகள் தங்களுக்கு சாதகமானவர்களுக்கு முதியோர் உதவித்தொகை பெற களமிறங்கியதும் பயனாளிகள் பட்டியல் பணம் கொடுத்தவர்களின் பட்டியலாக மாறிப்போனது.

உதவித்தொகைக்கு லஞ்சம்:
உதவித்தொகை பெற 3 ஆயிரம் ரூபாய் முதல் 5 ஆயிரம் ரூபாய் வரை வசூலிக்கப்பட்டு விதிமுறைகள் அனைத்தும் மீறப்பட்டன. இவ்வாறு விதிமுறைகளை மீறி ஒவ்வொரு கிராமத்திலும் நூற்றுக்கணக்கான பயனாளிகள் திட்டத்தில் சேர்க்கப்பட்டனர்.

கட்டாயத்தால் சேர்க்கப்பட்டவர்கள்:
மக்களை தேடி வருவாய்த்துறை முகாம் கிராமங்களில் நடத்தப்பட்ட போது கட்டாயம் காரணமாக பயனாளிகள் அதிகளவு திட்டத்தில் சேர்க்கப்பட்டனர். உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கு முதியோர் உதவித்தொகை பெறுவோர் ஓட்டு வங்கியாக காட்சியளித்தனர்.

பல்வேறு குளறுபடிகள்:
இவ்வாறு திட்டத்தில் பல்வேறு குளறுபடிகள் ஏற்பட்ட நிலையில் அரசு நிதி ஒதுக்கீடு திடீரென நிறுத்தப்பட்டது. உதவித்தொகை கிடைக்கும் என முதியோர் வங்கிகளுக்கும் தாலுகா அலுவலகத்திற்கும் அலைந்தனர்.

முடங்கிய திட்டம்:
ஆனால் உறுதியான பதில் கிடைக்கவில்லை. அளவுக்கு அதிகமாக சேர்க்கப்பட்ட பயனாளிகளே திட்டம் முடங்கும் நிலைக்கு தள்ளப்பட்டதற்கு காரணம் என தெரியவந்தது. இதனையடுத்து வருவாய்த்துறை சார்பில் தகுதியற்ற பயனாளிகளை கண்டறியும் பணி துவங்கப்பட்டது.

உண்மை பயனாளிகள் பாதிப்பு:
இப்பணியால் உண்மையாகவே பாதிக்கப்பட்டு உதவித்தொகை பெற்று வந்த பயனாளிகளும் பாதிக்கப்பட்டனர். லோக்சபா தேர்தல் நெருங்கும் நிலையில் முதியோர் உதவித்தொகை பயனாளிகளுக்கு தொகை நிறுத்தப்பட்டதால் அது ஆளுங்கட்சிக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்ற பதைபதைப்பு அக்கட்சி தொண்டர்களிடையே உள்ளது. இவ்வாறு முதியோர் உதவித்தொகை உதவாத தொகையாக மாறியுள்ளது.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்!












Click it and Unblock the Notifications