என்னது.. டிசம்பர் 12ல் இந்தியாவுக்கு வந்து 'லிங்கா' முதல்நாள் முதல் காட்சி பார்க்கிறாரா ஒபாமா?
சென்னை: இந்தியாவின் குடியரசு தினமான ஜனவரி 26ம்தேதி சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ள இந்தியா வருவதாக மோடியிடம் ஒப்புக் கொண்ட அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா திடீரென தனது முடிவை மாற்றிக் கொண்டு முன்கூட்டியே, அதாவது டிசம்பர் 12ம்தேதியே இந்தியா வருகிறாராமே. ஏன் அப்படி தனது முடிவை மாற்றிக் கொண்டார்? இதுபற்றிய விவரம் தெரிய வேண்டுமானால் மேற்கொண்டு படியுங்கள்.
அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா நமது குடியரசு தின நாளில் இந்தியா வருவதாக ஒப்புக் கொண்டிருந்தது அனைவரும் அறிந்ததே. இதையடுத்து பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரிப்புக்கு போன் செய்து, உங்கள் நாட்டில் நிலவரம் சரியான பிறகு அங்கும் வருகிறேன் என்று சமாதானம் செய்ததும் தெரிந்ததே.
SOURCES:
Obama considering advancing his visit to Dec 12th to watch Rajinikanth's Lingaa First Day First Show
— The UnReal Times (@TheUnRealTimes) November 21, 2014 ஆனால் ஒரே நாளில் ஒபாமா நிலைப்பாட்டில் திடீரென பெரும் மாற்றம் வந்துள்ளதாக கூறப்படுகிறது. ஜனவரி 26ம்தேதியன்று இந்தியா வருவதற்கு பதிலாக டிசம்பர் 12ம்தேதியே வர திட்டமிட்டுள்ளாராம். இப்படி நாங்கள் சொல்லவில்லை, சமூக வலைத்தள டிவிட் ஒன்று தெரிவிக்கிறது.
ஏன் டிசம்பர் 12ம்தேதியை தேர்ந்தெடுத்தார், அந்த தேதிக்கான அப்படியொரு மகத்துவம் என்ன, ஒரு ஜனநாயக நாட்டில் கொண்டாடப்படும் குடியரசு தினத்தை விட புனிதமான தினமா டிசம்பர் 12ம்தேதி என்பது என்பது போன்ற கேள்விகள் மண்டையை பிய்ப்பது சகஜமே.
ஆம்... மிக, மிக, மிக முக்கியமான நாள் டிசம்பர் 12ம்தேதி என்கிறது அந்த டிவிட். ஏனெனில் அன்றுதான் சூப்பர் ஸ்டார் என்று வர்ணிக்கப்படும் ரஜினிகாந்த் பிறந்த நாள். அதுமட்டுமா, கோடான கோடி ரசிகர்கள் சோறு, தண்ணி இல்லாமல் (ஏன்.. உடம்பு சரியில்லையா என கேட்கப்படாது) காத்திருக்கும், லிங்கா திரைப்படம் வெளியாகும் நாளும் அன்றுதான்.
டிசம்பர் 12ம்தேதி ஒபாமா வருவதே, லிங்கா படத்தை கண்டு களித்து, ரஜினிகாந்த் படத்தை முதல் நாள், முதல் காட்சியிலேயே பார்க்க வேண்டும் என்ற வாழ்க்கை லட்சியத்தை நிறைவேற்றிக் கொள்ளத்தானாம். ரஜினியை வைத்து இணையத்தில் உலவும் காமெடிகளில் இது ஒரு ரகம். அவ்வளவே..
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications