அங்கே என்ன தெரிகிறது..?? - ஜெ.வின் ஹெிகாப்டரை எட்டிப் பார்த்து 'செக்' செய்த அதிகாரிகள்!!
பொள்ளாச்சி: முதல்வர் ஜெயலலிதாவின் ஹெலிகாப்டரையும் சோதனை செய்யுங்களேன் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ சொன்னாலும் சொன்னார்.. தேர்தல் கமிஷன் அதிகாரிகள் தற்போது பெரும் சோதனைக்குள்ளாகி வருகின்றனராம்.
வைகை சொன்னதைக் கேட்டு ஹெலிகாப்டரை செக்கப் செய்யச் சென்றால், துப்பாக்கியை நீட்டியபடி இருக்கும் பாதுகாலர்கள் ஹெலிகாப்டருக்குள் அதிகாரிகளை ஏறவே விடுவதில்லையாம்.
அப்படியே வெளியில் நின்று எட்டிப் பார்த்தபடி சோதனை செய்து விட்டுப் போங்கள் என்று கூறுகிறார்களாம்.

வைகோவிடம் சிக்கிய அதிகாரிகள்
சமீபத்தில் வைகோ பயணம் செய்த வாகனத்தை தடாலடியாக நிறுத்திய தேர்தல் பறக்கும் படையில் இடம் பெற்றுள்ள அதிகாரிகள், போலீஸார், வண்டியை சோதனையிட வேண்டும் என்று கூறி வைகோவிடம் நன்றாக வாங்கிக் கட்டிக் கொண்டனர்.

முதல்வரின் ஹெலிகாப்டரையும் சோதனையிடுங்கள்
அவர்களிடம் கோபக் கனல் காட்டிய வைகோ, இப்படி முதல்வர் ஜெயலலிதாவின் ஹெலிகாப்டரையும் சோதனையிடுவீர்களா என்று கோபமாக கேட்டார்.

அடடா.. மறந்தே போச்சே
அதன் பிறகுதான் இப்படி ஒரு சிக்கல் இருப்பதே தேர்தல் அதிகாரிகளுக்கு நினைவுக்கு வந்தது போலும். தலைமைத் தேர்தல் அதிகாரி பிரவீன் குமாரும், முதல்வரின் ஹெலிகாப்டரையும் அவ்வப்போது சோதனையிடுகிறோமே என்று சொல்லி வைத்தார்.

அட பக்கத்துலேயே போக முடிலைங்க நீங்க வேற...
ஆனால் நிஜத்தில் ஜெயலலிதாவின் ஹெலிகாப்டரின் நிழலைக் கூட நெருங்குவதற்கு அதிகாரிகள் கடும் சிரமத்தை சந்திக்க வேண்டியுள்ளதாம். அவ்வளவு கெடுபிடி செய்கிறார்களாம் முதல்வரின் பாதுகாப்பு அதிகாரிகள்.

உள்ளே வரப்படாது...
ஹெலிகாப்டருக்குள் ஏறி சோதனையிடும் பேச்சுக்கே இடமில்லை என்று கூறி விடுகிறார்களாம்.

அப்படியே எட்டிப் பார்த்துட்டு ஓடிப் போய்ரு...
ஹெலிகாப்டருக்குள் இருப்பதை அதாவது உள்ளே என்னவெல்லாம் இருக்கிறது என்பதை ஜன்னல் வழியாக எட்டிப் பார்த்து சோதனையிட்டுக் கொள்ளுங்கள் என்று கூறுகிறார்களாம்.

யாருப்பா எட்டிப் பார்க்கிறது...?
இதையடுத்து அதிகாரிகள் வேறு வழியில்லாமல் ஹெலிகாப்டருக்குள் ஜன்னல் வழியாக எட்டிப் பார்த்து 'தீவிர' சோதனை போடுகிறார்களாம். ஆனால் அம்மா ஹெலிகாப்டருக்குள் எட்டிப் பார்க்க சில அதிகாரிகள் தயக்கம் காட்டுகிறார்களாம்.. எதிர் விளைவுகளை எண்ணிப் பார்த்து.

ஓகே.. போஸ் ப்ளீஸ்.. ஆ.. கிளிக்...
அத்தோடு நில்லாமல், ஜன்னல் வழியாக அதிகாரி எட்டிப் பார்த்து சோதனை இடுவதை போட்டோவும் பிடித்து வைத்துக் கொள்கின்றனராம். நாளைக்கு யாராச்சும் செக்கப் செய்தீர்களா என்று கேட்டால் காண்பிக்க வேண்டுமே என்பதற்காக...

பொள்ளாச்சியில் இப்படித்தான்
பொள்ளாச்சியில் பிரசாரத்துக்கு வந்த ஜெயலலிதாவின் ஹெலிகாப்டரை சோதனை செய்யப் போகிறோம் என்று தேர்தல் கண்காணிப்பு அதிகாரிகள் புறப்பட்டபோது இப்படித்தான் நடந்ததாம்.
-
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications