சென்னை சாலையில் ஆறாய் ஓடிய எண்ணெய் படலம்.. எண்ணையில் வழுக்கி விழுந்து பல வாகன ஓட்டிகள் காயம்
சென்னையில் திடீரென சாலைகளில் எண்ணெய் படலம் பரவியதால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகினர்.
சென்னை: சென்னையில் கிண்டி, கோடம்பாக்கம், வள்ளூவர் கோட்டம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் எண்ணெய் படலம் பரவியதால் வாகன ஓட்டிகள் 20க்கும் மேற்பட்டோர் சறுக்கி விழுந்து காயமடைந்தனர்.
சென்னையில் குப்பைகளை ஏற்றிச் சென்ற லாரிகளில் இருந்து கசியும் கழிவுகள் சாலையில் படிந்திருந்தது.

சென்னையில் இன்று மாலை சில இடங்களில் மழை பெய்ததால் அக்கழிவுகள் வழவழப்பாக மாறியது. இதனால் இரு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகன ஓட்டிகள் பிரேக் பிடிக்க முடியாமல் வாகனத்துடன் சறுக்கினர். இதில் 20-க்கும் மேற்பட்டோர் சறுக்கி விழுந்து காயமடைந்தனர்.
சென்னை வள்ளுவா் கோட்டம் சிக்னல் குப்பைக்கிடங்கு அருகேயும் சாலையில் திடீரென எண்ணெய் போன்ற படலம் ஏற்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியில் இருசக்கர வாகனத்தில் செல்லுவோர் கவனமாக செல்லும்படி போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.
அதேபோல் வடபழனி, எழும்பூர், கோடம்பாக்கம், கிண்டி, சைதாப்பேட்டை, பகுதிகளில் எண்ணெய் படலம் ஆறாக ஓடியது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகினர். எண்ணை படலத்திற்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications