Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ராமேஸ்வரத்தில் கொத்தாக கிடைத்த வெடிகுண்டுகள்.. அமெரிக்கா, ரஷ்யாவில் செய்யப்பட்டது.. திக் ரிப்போர்ட்

ராமேஸ்வரம் அருகே தங்கச்சி மடத்தில் வீடு ஒன்றில் கிடைத்த வெடிப்பொருட்கள் அனைத்தும் அமெரிக்கா ரஷ்யாவில் தயாரிக்கப்பட்டது என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    ராமேஸ்வரத்தில் கிடைத்த வெடிபொருட்கள் அமெரிக்காவில் தயாரிக்கப்பட்டது - வீடியோ

    ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் அருகே தங்கச்சி மடத்தில் வீடு ஒன்றில் கிடைத்த வெடிப்பொருட்கள் அனைத்தும் அமெரிக்கா ரஷ்யாவில் தயாரிக்கப்பட்டது என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

    கடந்த சில வாரங்களுக்கு முன் ராமேஸ்வரம் அருகே தங்கச்சி மடத்தில் வீடு ஒன்றில் கிணறு தோண்டும் போது வெடிகுண்டுகள் கிடைத்தது. ராமேஸ்வரம் தங்கச்சிமடம் அருகே அந்தோணியார்புரம் பகுதியில் கழிவு நீர் கிணறு தோண்டும் போது இந்த வெடிகுண்டுகள் கிடைத்துள்ளது.

    மர்மமான முறையில் 20க்கும் மேற்ப்பட்ட பெட்டிகள் காவல்துறையால் மீட்புகப்பட்டுள்ளது. மீட்கப்பட்ட பெட்டிகளில் துப்பாக்கி குண்டுகள் துருப்பிடித்த நிலையில் இருந்தது.

    என்ன இருந்தது

    என்ன இருந்தது

    இதில் நிறைய வெடிபொருட்கள், துப்பாக்கிகள்,தோட்டாக்கள் இருந்தது. இது மிகவும் பழைய ஏகே 47 ரக துப்பாக்கிகள் என்று கூறப்படுகிறது. அந்த வீட்டில் புதைக்கப்பட்டு இருந்த 21 தோட்டாக்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இவற்றை விடுதலைபுலிகள் அமைப்பைப் சேர்ந்தவர்கள் பயன்படுத்திருக்கலாம் என்று கோணத்தில் விசாரிக்கப்பட்டது.

    தீவிர விசாரணை

    தீவிர விசாரணை

    இராமநாதபுரம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஓம்பிரகாஷ் மீனா சம்பவ இடத்தில் விசாரணை செய்து வந்தார். அதேபோல் தமிழக கமாண்டோ படையை சேர்ந்த வல்லுநர்கள் இந்த ஆயுதங்களை சோதனை செய்தனர். வீட்டின் உரிமையாளரிடம் இதுகுறித்து விசாரணை செய்யப்பட்டது.

    எங்கு தயாரிக்கப்பட்டது

    எங்கு தயாரிக்கப்பட்டது

    விசாரணையின் முடிவில் தற்போது இவைகள் எங்கு தயாரிக்கப்பட்டது என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதன்படி அதில் இருந்த தோட்டாக்கள் அமெரிக்கா, யுகோஸ்லோவியாவில் தயாரிக்கப்பட்டவை என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதேபோல் வெடிபொருட்கள் ஆலந்து, ரஷ்யாவில் தயாரிக்கப்பட்டவை என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

    மிகவும் பழையது

    மிகவும் பழையது

    இந்த வெடிபொருட்கள் எல்லாம் மிகவும் பழமையானது. இது 40 வருடங்களுக்கு முன் தயாரிக்கப்பட்டது. இது முழுக்க முழுக்க வீரியம் குறைந்து செயலிழந்துவிட்டதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக இதை பயன்படுத்த முடியாது, இதனால் ஆபத்து கிடையாது என்று போலீசார் தெரிவித்துள்ளனர். இதில் நீதிமன்றத்தில் சமர்ப்பித்த பின் அழிக்க போவதாக கூறியுள்ளனர்.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+