கிருஷ்ணகிரி அருகே மாடுகளைத் தாக்க வந்த சிறுத்தையை வெட்டிக் கொன்ற விவசாயி
கிருஷ்ணகிரி அருகே தனது மாடுகளைத் தாக்க வந்த சிறுத்தையை விவசாயி ஒருவர் வெட்டிக்கொன்றுள்ளார்.
கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி அருகே தான் வளர்த்து வந்த மாடுகளைத் தாக்க வந்த சிறுத்தையை விவசாயி ஒருவர் வெட்டிக் கொன்றுள்ளார். இந்தச் சம்பவம் அந்தப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கிருஷ்ணகிரி அருகே மகாராஜகடை கிராமத்தில் வசித்து வருபவர் ராமமூர்த்தி. 62 வயதான அவர் அப்பகுதியில் விவசாயம் செய்து வருகிறார். இவர் தனது தோட்டத்தில் 8 கறவை மாடுகள் வளர்த்து வருகிறார்.

இப்பகுதியில் காட்டுவிலங்குகள் நடமாட்டம் அதிகம். இதனால் அப்பகுதி மக்கள் தாங்கள் வளர்க்கும் கால்நடைகளுக்கு பாதுகாப்பாய் காவல் இருப்பது வழக்கம்.
இந்நிலையில், இன்று காலை 7.30 மணியளவில் விவசாயி ராமமூர்த்தி, தனது மாடுகளிடத்தில் பால் கறப்பதற்காக வந்துள்ளார். அப்போது, காட்டுப்பகுதியில் இருந்து வந்த சிறுத்தை ஒன்றை மாடுகளை தாக்க வந்தது.
இதனைப்பார்த்து, அதிர்ச்சியடைந்த ராமமூர்த்தி, சிறுத்தையை விரட்ட முயற்சி செய்துள்ளார். ஆனால், சிறுத்தை ராமமூர்த்தியை தாக்க வந்துள்ளது. இதனால், தோட்டத்தில் இருந்த அரிவாளை எடுத்து, புலியை தாக்கி உள்ளார் ராமமூர்த்தி.
இதனால் வெட்டுப்பட்ட சிறுத்தை பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது. இந்தத் தகவலை அறிந்த வனத்துறையினர், சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து சிறுத்தையின் உடலைக் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications