புதிய பேருந்துகளுக்கு ரெஸ்ட்... உலா வரும் ஓட்டை உடைசல் – பயணிகள் கவனிப்பாரா?
நெல்லை: தமிழகம் முழுவதும் அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் புதிய பேருந்துகளை இயக்காமல் ஓட்டை உடைசல் பேருந்துகளை இயக்கி வருவதாக பொதுமக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.
அரசு போக்குவரத்து கழகத்தில் சுமார் 800 புதிய பேருந்துகள் கடந்த சில மாதங்களாக இயக்கப்படாமல் ஓரங்கப்பட்டுள்ளதால் மக்கள் வரிப்பணம் வீணாகி வருவதாகவும் புகார் எழுந்துள்ளது.

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் நெல்லை உள்பட 8 கோட்டங்கள் உள்ளன. இதன் மூலம் 20 ஆயிரம் பேருந்துகள் பல்வேறு வழித்தடங்களில் இயங்கப்படுகிறது.
இதில் பல கோட்டங்களில் 50 சதவீத பேருந்துகள் ஓட்டை உடைசலுடன் ஆகி ஓடி கொண்டிருக்கிறது. இதனை கருத்தில் கொண்டு ஆண்டுதோறும் பழைய பேருந்துகளுக்குப் பதிலாக புதிய பேருந்துகள் இயக்கப்படும்.
2014 ஆம் ஆண்டில் புதிய மற்றும் புதுப்பிக்கப்பட்ட 200 பேருந்துகள் ஓதுககீடு செய்யப்பட்டன. இதில் 50 சதவீத பேருந்துகள் மட்டுமே வழங்கப்பட்டுள்ளன.
நெல்லை அரசு போக்குவரத்து கழக கோட்டத்தில் நெல்லை, தூத்துக்குடி, நாகரகோவில் மண்டலங்கள் மூலம் 1985 பேருந்துகள் தினமும் இயக்கபபடுகின்றன. இதில் மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளுக்கு இயக்கப்படும் பெரும்பாலான பேருந்துகள் பராமரிப்பின்றி இயக்கப்படுவதாகவும், இதன் காரணமாக பல வழித்தடங்களில் தினமும் பேருந்துகள் பழுதடைந்து நிற்கும் அவல நிலை ஏற்பட்டு வருவதாகம் பயணிகள் புகார் தெரிவிக்கின்றனர்.
நெல்லை மாவட்டத்தில இயக்கப்படடு வரும் பெரும்பாலான பேருந்துகள் ஜன்னல் மற்றும் பேருந்துகளின் இடது மற்றும் வலது புற கவர்கள் வளைந்தும், நெளிந்தும் காணப்படுகிறது.
பல கோடி மதிப்புடைய மக்கள வரிப்பணத்தில் வாங்கப்பட்ட புதிய பேருந்துகள் இயக்கப்படாமல் கடந்த சில மாதங்களாக பணிமனைகளில் முடக்கி வைக்கப்பட்டுள்ளதால் வருமான இழப்பு ஏற்பட்டுள்ளது.
இது போல் 8 போக்குவரத்து கழக கோட்டங்களில் சுமார் 800 மேற்பட்ட புதிய பேருந்துகள் இயக்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் பழைய அரசு பேருந்துகளைக் கண்டாலே பொதுமக்கள் அலறி அடித்து ஓடி வருகின்றனர். போக்குவரத்து அமைச்சர் இந்த விவகாரத்தை கொஞ்சம் கவனிப்பாரா? என்பது பொதுமக்களின் கேள்வியாகும்.
-
ஏசியை 18 டிகிரியில் வைத்தால் கரண்ட் பில்லில் இவ்வளவு மாற்றமா?.. தமிழக மின்சார வாரியம் கணக்கு இதோ -
விஜய் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நேரம், திரிஷா வெளியிட்ட பதிவு.. இப்படி பண்றீங்களேம்மா? -
916 KDM நகை வாங்குவோர் கவனத்திற்கு.. ஒரு சவரன் தங்கம் எடுக்கும்போதே நஷ்டமா? பலர் செய்யும் பெரிய தவறு -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
அழகே அழகு அப்டேட்: திமிரா பேசிய சுரேஷுக்கு சரியான பதிலடி கொடுத்த அழகுமதி.. ஒன்று சேர்ந்த குடும்பம் -
Bose Venkat: சீட் தராததால் கட்சி மாறுகிறேனா? நான் திமிர்பிடித்த திமுககாரன்! போஸ் வெங்கட் பொளேர்! -
வில்லிவாக்கம் விஸ்வரூபம்.. ஆதவ் இதை எதிர்பார்த்து இருக்கவே மாட்டாரு.. கேம் சேஞ்சர் கார்த்திக் மோகன் -
சிக்சர் அடித்த ஸ்டாலின்.. இந்தியாவிலேயே முதன்முறை! பெண்களுக்காக ஸ்டாலின் கொண்டு வரும் மெகா திட்டம்! -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
மகளிரை கவர சூப்பர் வாக்குறுதி.. ரூ.5 லட்சம் வரை சுய உதவி குழு பெண்களுக்கு கடன்.. ஸ்டாலின் அறிவிப்பு -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை!












Click it and Unblock the Notifications