கோடம்பாக்கம் பாலத்திலிருந்து தவறி விழுந்த முதியவர் பரிதாப பலி!
சென்னை: சென்னை கோடம்பாக்கம் பாலத்தின் படிகட்டில் இருந்து தவறி விழுந்து முதியவர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அவரது குடும்பத்தினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
கோடம்பாக்கம் வரதராஜ பேட்டையை சேர்ந்தவர் சுகுமாரன். இவர் கே.கே.நகரில் உள்ள அய்யப்பன் கோவிலில் ஊழியராக பணிபுரிந்தார். நேற்று மாலை கோவிலில் பணி முடிந்ததும் வீடு திரும்புவதாக செல்போனில் தகவல் கொடுத்தார். ஆனால் இரவு முழுவதும் திரும்பி வரவில்லை. எனவே அவரை குடும்பத்தினர் தேடி வந்தனர்.

இன்று காலை கோடம்பாக்கம் பாலத்தின் படிக்கட்டு அருகே ஒரு முதியவர் விழுந்து இறந்து கிடப்பதாகவும், தலையில் காயம் இருப்பதாகவும் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
உடனடியா கோடம்பாக்கம் இன்ஸ்பெக்டர் கவுதமன் விரைந்து சென்று பிணத்தை கைப்பற்றி விசாரணை நடத்தினார். அப்போது, இரவில் புறப்பட்ட அவர் பஸ்சில் வந்து வீட்டிற்கு செல்ல படிக்கட்டில் இறங்கும் போது மழை பெய்தது. எனவே, அவர் வழுக்கி விழுந்துள்ளார்.
இதனால் தலையில் அடிபட்ட அவர் அதே இடத்தில் மயங்கி விழுந்து இறந்து இருக்கலாம் என போலீசார் கருதுகின்றனர். இதுகுறித்து கோடம்பாக்கம் போலீசில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications