பேத்தி வயதுடைய 7 வயது சிறுமியை பலாத்காரம் செய்த முதியவர்- 3 ஆண்டுகள் சிறை!
கோத்தகிரி: நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் சிறுமியை பலாத்காரம் செய்த முதியவருக்கு 3 ஆண்டு சிறைதண்டனை விதித்து ஊட்டி மகளிர் விரைவு கோர்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது.
நீலகிரி மாவட்டம், கோத்தகிரி அருகிலுள்ள சோலூர் மட்டம் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் கருப்பையா. கடந்த 2013 டிசம்பர் 9 ஆம் தேதி தனது வீட்டின் அருகே வசித்து வந்த ஒரு குடும்பத்தை சேர்ந்த ஏழு வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

அந்த சிறுமியின் பெற்றோர்கள் கொடுத்த புகாரின்படி, சோலுார்மட்டம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, கருப்பையாவை கைது செய்தனர். இது தொடர்பான வழக்கு, ஊட்டி மகளிர் விரைவு கோர்ட்டில் நடந்து வந்தது. வழக்கின் தீர்ப்பை நீதிபதி சர்வமங்களா நேற்று வழங்கினார்.
குற்றவாளி கருப்பையாவுக்கு மூன்று ஆண்டு சிறை 5,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படுகிறது. குழந்தைகள் நீதி (குழந்தைகள் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் தீர்ப்பு வழங்கப்பட்ட நாளில் இருந்து 30 நாட்களுக்குள் மாவட்ட நிர்வாகம் 2 லட்சம் ரூபாய் பெற்று குழந்தையின் பராமரிப்புக்காக மாவட்ட சட்ட உதவி ஆணையத்திடம் வழங்க வேண்டும் என்று தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications