தூத்துக்குடி அருகே பென்சன் கோரி முதியோர் நடத்திய உள்ளிருப்பு போராட்டம்!!
கோவில்பட்டி: தூத்துக்குடி அருகே முதியோர்களுக்கு பென்சன் பணம் நிறுத்தப்பட்டதால் அவர்கள் உள்ளிருப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர். இது அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே இலுப்பையூரணி உள்பட சுற்றுபுற கிராமங்களை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட முதியோர் மாதாந்திர உதவி தொகை வழங்கி வந்தது. இந்த நிலையில் சில மாதங்களாக இவர்களுக்கு வங்கிகள் மூலம் உதவி தொகை வழங்கப்படவில்லை. இதனால் அவர்கள் சிரமப்பட்டு வருகின்றனர்.

மாதாந்திர உதவி தொகை வழங்க கோரி கோவில்பட்டி தாலுகா அலுவலகத்தில் பல முறை மனுக்கள் அளித்தும் இதுவரை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை. இதையடுத்து உதவி தொகையை உடனடியாக வழங்க கோரி இலுப்பையூரணி மற்றும் சுற்று பகுதியை சேர்ந்த வயது முதிர்ந்த ஆண்கள் மற்றும் பெண்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் இலுப்பையூரணி முன்னாள் பஞ்சாயத்து தலைவர் உத்தண்டராமன் தலைமையில் கோவில்பட்டி தாலுகா அலுவலகத்தில் அமர்ந்து உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர்.
இதில் மந்திதோப்பு கடடுமான தொழிலாளர் சங்க பொருளாளர் சாமி உள்பட பலர் கலந்து கொண்டனர். இதையடுத்து அங்கு விரைந்து வந்த தாசில்தார் ஜோதி உதவி தொகை விரைந்து வழங்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததை தொடர்ந்து அவர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இது அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
Free Fridge: அதிமுகவின் இலவச பிரிட்ஜ்! யாருக்கெல்லாம் கிடைக்கும்? எவ்வளவு ரூபாய்க்கு இருக்கும்? -
யார் அந்த அதிர்ஷ்டசாலி? நகைக்கடை, விவசாயக்கடன் தள்ளுபடி, மாதம் 10000 சலுகை? விவசாயிகளின் செம திட்டம் -
சிறகடிக்க ஆசை : கண்ணீர் விட்டு அழுத மனோஜ்.. இவருக்கா இந்த நிலைமை? முத்து மீனா செய்த செயல்! கதையே மாறுது -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
Illatharasi: இல்லத்தரசிகளுக்கு ரூ 8000! திமுக கூப்பனில் பிரிட்ஜ், வாஷிங் மெஷின் வாங்க முடியுமா? -
சிறுசேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்தவர்களுக்கு சூப்பர் சர்ப்ரைஸ்.. ஏப்ரல் 1 மத்திய அரசின் அதிரடி -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே -
சிலிண்டர் ஏஜென்சி வைத்திருக்கும் நண்பனின் தந்தைக்கு மாதம் 1.90 லட்சம் வருமானம்.. நெட்டிசன் தகவல் -
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்? -
இரண்டாக உடையும் வானம்.. இடி, மின்னலுடன் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம்












Click it and Unblock the Notifications