சிறந்த கதாசிரியர், மனிதாபிமானி.... வினுச்சக்ரவர்த்திக்கு புகழாரம் சூட்டிய கோலிவுட்! - வீடியோ

நடிகர் வினுசக்ரவர்த்தி தன்னுடைய 71ஆவது வயதில் காலமானார். அவருக்கு நடிகர்கள் இயக்குநர் எஸ்.பி முத்துராமன், ஒய். ஜி மகேந்திரன், விஷால், கார்த்தி, விவேக், செந்தில், சூரி, சிவக்குமார் மற்றும் பிரேமலதா

Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகர் வினுச்சக்கரவர்த்தி உடல்நலக் குறைவால் காலமானார். அவருக்கு திரையுலக பிரபலங்கள் இயக்குநர் எஸ்.பி முத்துராமன், நடிகர் சிவக்குமார், விஷால், விவேக், செந்தில், தாமு உள்ளிட்ட ஏராளமானோர் சென்று இறுதி அஞ்சலி செலுத்தினர்.

தமிழ்த்திரைப்பட நடிகர் வினுசக்ரவர்த்தி, கடந்த மூன்று ஆண்டு காலமாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு இரத்தக் கொதிப்பு, சர்க்கரை உள்ளிட்ட நோய்கள் இருந்தன.

 ollywood paid last tribute to actor Vinu chakravarthi

அவர் தமிழ், தெலுங்கு உள்பட 1003 திரைப்படங்களில் நடித்துள்ளார். இறுதியாக வாயை மூடி பேசவும் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். உடல்நலக்குறைவு காரணமாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கபப்டிருந்தவர் நேற்று இரவு காலமனார்.

அவருடைய உடல் சென்னையில் அவரது வீட்டில் இறுதி அஞ்சலிக்காக வைக்கபட்டது. தமிழ்த்திரையுலகைச் சேர்ந்த ஏராளமான நடிகர்கள் இறுதி அஞ்சலி செலுத்தினர்.

நடிகர் சிவக்குமார் கூறும்போது, ''வண்டிச்சக்கரம் படத்தின் வெற்றிக்கு காரணமாக அமைந்தவர். சில்க் ஸ்மிதா என்ற நடிகையை அறிமுகப்படுத்தியவர். மிகச் சிறந்த கதாசிரியர்'' எனக் கூறினார்.

நடிகர் வையாபுரி,'' எனக்கு தந்தை இல்லை. ஆனால் என் திருமணத்தை ஒரு தந்தையைப் போல் முன்னின்று நடத்தியவர் வினுசக்ரவர்த்தி. என் வாழ்வின் அத்தனை முக்கியமான நேரங்களிலும் எனக்கு ஆறுதலாக, ஊக்கமாக உடன் இருந்தவர்'' என நெகிழ்ச்சியுடன் கூறினார்.

பிரேமலதா விஜயகாந்த் கூறும்போது,'' விஜயா மருத்துவமனையில் அனுமதிக்கபப்ட்டிருந்தபோது, கேப்டனை பார்க்க வேண்டும் என்று கூறியிருந்தார். உடனே கேப்டன் மருத்துவமனைக்குச் சென்று நேரில் பார்த்தார். கேப்டன் மேல் மிகுந்த அன்பு கொண்டவர் வினுசக்ரவர்த்தி'' என்று கூறினார்.

அனைவருக்கும் நல்ல வழிகாட்டியாக இருந்துள்ளார் என்பதை நடிகர்கள் அனைவரும் நினைவுகூர்ந்தார்கள். நடிகர்கள் விஷால், கார்த்தி, விவேக், செந்தில், சூரி, சிவக்குமார் ஆகியோர் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்கள். தேமுதிக தலைவர் விஜயகாந்த் சார்பாக அவரது மனைவி பிரேமலதா நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+