ஓ.பி.எஸ்ஸுக்கு ஆதரவு தெரிவித்த ஓம் சக்தி சேகர் அதிமுகவிலிருந்து நீக்கம்
முதல்வர் பன்னீர் செல்வத்திற்கு ஆதரவு தெரிவித்த புதுவையைச் சேர்ந்த அதிமுக முன்னாள் எம்எல்ஏ ஓம் சக்தி சேகர் அக்கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
சென்னை: புதுச்சேரி அதிமுகவின் முன்னாள் எம்எல்ஏ ஓம் சக்தி சேகர் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவாக செயல்பட்டதாகக் கூறி ஓம் சக்தி சேகர் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
தமிழக முதல்வர் ஓ. பன்னீர்செல்வம், தன்னை கட்டாயப்படுத்தி முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய வைத்தனர் என்ற வெடிகுண்டை மெரினாவில் தூக்கிப் போட்டார். அதன் பிறகு, தமிழகத்தில் பெரும் காட்சி மாற்றங்கள் நடைபெற்று வருகின்றன.

ஓ. பன்னீர் செல்வத்திற்கு தமிழகத்தைச் சேர்ந்த அதிமுக எம்எல்ஏக்கள் 5 பேரும், முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் எம்எல்ஏக்கள் ஆதரவு அளித்துள்ளனர். இதே போல் புதுவை அதிமுக முன்னாள் எம்எல்ஏ ஓம்சக்தி சேகரும் ஆதரவு அளித்துள்ளார். மேலும், பன்னீர்செல்வத்தின் முடிவுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் பொதுமக்களுக்கு ஓம் சக்தி சேகர் இனிப்பு வழங்கியதோடு, சென்னை சென்று முதல்வரையும் சந்தித்து ஆதரவை தெரிவித்தார்.
இந்நிலையில், ஓம்சக்தி சேகர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று புதுவை மாநில அதிமுக செயலாளர் புருஷோத்தமன் கூறியிருந்த நிலையில், சென்னையில் இருந்து அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா ஓம் சக்தி சேகர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டதாக அறிவித்துள்ளார்.
-
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர்












Click it and Unblock the Notifications