அடப்பாவமே: அதற்குள் நெட்டில் என்னை அறிந்தால் கசிந்துவிட்டதே!
சென்னை: என்னை அறிந்தால் படம் இன்று தான் ரிலீஸாகியுள்ளது. ஆனால் அதற்குள் படம் இணையதளத்தில் வெளியாகிவிட்டது.
கௌதம் மேனன் இயக்கத்தில் அஜீத் நடித்துள்ள என்னை அறிந்தால் படம் உலகம் முழுவதும் இன்று ரிலீஸாகியுள்ளது. சென்னையில் உள்ள காசி தியேட்டரில் நள்ளிரவு காட்சி திரையிடப்பட்டது. படம் ஓடும் தியேட்டர்களில் ரசிகர்கள் கூட்டம் அலைமோதுகிறது.

இந்நிலையில் படம் வெளியாகி ஒரு நாள் கூட ஆகாத நிலையில் முழுப்படமும் இணையதளத்தில் வெளியாகியுள்ளது. விஷமிகள் சிலர் படத்தை இணையதளத்தில் பார்க்குமாறு கூறி அந்த லிங்கை வெளியிட்டுள்ளனர்.
இவ்வாறு தான் இயக்குனர் ஷங்கர் பார்த்து பார்த்து எடுத்த ஐ படமும் ரிலீஸான வேகத்தில் இணையதளத்தில் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது. இணையதளத்தில் வெளியான பிரதி யாரோ தியேட்டரில் எடுத்துள்ளது என்பதால் தெளிவாக இல்லை என்று வேறு அதை பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்.
படக்குழுவினர் பல மாதங்கள் கஷ்டப்பட்டு எடுக்கும் படத்தை இவ்வாறு இணையதளத்தில் வெளியிடுகிறார்கள். என்ன தான் படம் இணையதளத்தில் வெளியானாலும் தியேட்டருக்கு வரும் ரசிகர்கள் வரத் தான் செய்வார்கள் என்று சினிமாக்காரர்கள் மனதை தேற்றிக் கொள்கிறார்கள்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications