அதுக்குள்ள மதுரையில் பொதுக்கூட்டம்னு கிளப்பி விட்டாங்களே.. கமல்ஹாசன் மறுப்பு
Recommended Video

சென்னை: பிப்ரவரி 24ம் தேதி நடிகர் கமல்ஹாசன் மதுரையில் பொதுக்கூட்டம் நடத்த உள்ளதாக வெளியான தகவலை அவர் மறுத்துள்ளாார்.
அரசியல் பிரவேசம் குறித்து கமல்ஹாசன் ஆழ்வார்பேட்டையிலுள்ள தனது இல்லத்தில் இன்று மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை, திண்டுக்கல் ஆகிய 4 மாவட்ட நற்பணி மன்றத்தினருடன் ஆலோசனை நடத்தினார்.
ஆலோசனையின்போது பிப்ரவரி 24ம் தேதி மதுரையில் பொதுக்கூட்டம் நடத்த உள்ளதாக கமல் தெரிவித்தார் என செய்திகள் வெளியாகின.

அப்துல்கலாம் வீடு
பிப்.21ம் தேதி ராமநாதபுரம் மாவட்டத்தில் அப்துல் கலாம் இல்லத்தில் இருந்து அரசியல் சுற்றுப் பயணத்தை ஆரம்பிக்க உள்ளதாக கமல் ஏற்கனவே அறிவித்திருந்தார். அன்றே தனது கட்சி பெயரை அறிவிக்க உள்ளதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.

மதுரையில் பொதுக்கூட்டம்
இந்த நிலையில், 24ம் தேதி மதுரையில் மாபெரும் பொதுக்கூட்டத்தை நடத்த அவர் முடிவு செய்துள்ளதாக சில மீடியாக்களில் தகவல் வெளியானது. 21ம் தேதி முதல் சில மாவட்டங்களில் சுற்றுப் பயணம் செய்து மக்களை சந்தித்த பிறகு 24ம் தேதி மதுரையில் நடத்தப்பட உள்ள பொதுக்கூட்டத்துடன் முதல்கட்ட சுற்றுப் பயணத்தை கமல் நிறைவு செய்கிறார் என்றும் தகவல்கள் வெளியாகின.

ஜெயலலிதா பிறந்த நாள்
ஜெயலலிதா பிறந்த நாளான பிப்ரவரி 24ஆம் தேதி அன்று அதிமுகவின் அதிகாரப்பூர்வ நாளிதழ் 'நமது அம்மா' நாளிதழ் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, கமல்ஹாசன் அன்றே ஏன் பொதுக் கூட்டம் நடத்துகிறார் என்ற சந்தேகம் ஏற்பட்டது.

கமல் மறுப்பு
ஆலோசனைக்கு பிறகு வீட்டுக்கு வெளியே கூடியிருந்த ரசிகர்களிடம் பேசிய கமல், மதுரையில் 24ம் தேதி பொதுக்கூட்டம் நடைபெறுவதாக வெளியான தகவலை மறுத்தார்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications