Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

நவ. 5ஆம் தேதி "கமல் ஆப்" அறிமுகம்.. கட்சி அறிவிப்பு வெளியாகும் என மீண்டும் எதிர்பார்ப்பு!

நவம்பர் 5ஆம் தேதி நடிகர் கமல்ஹாசன் புதிய செயலி ஒன்றை அறிமுகப்படுத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Subscribe to Oneindia Tamil

சென்னை: நவம்பர் 5ஆம் தேதி நடிகர் கமல்ஹாசன் புதிய செயலி ஒன்றை அறிமுகப்படுத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நடிகர் கமல்ஹசன் கடந்த ஓராண்டாக அரசியல்வாதிகள் மற்றும் அரசை விமர்சித்து டிவிட்டி வந்தார். அரசியலக்கு விரைவில் வருவேன் என்றும் அவர் பகீரங்கமாக தெரிவித்தார்.

இதைத்தொடர்ந்து நடிகர் கமல்ஹாசனின் பிறந்த நாளான வரும் நவம்பர் 7ஆம் தேதி அரசியல் கட்சி தொடங்குவது குறித்த முக்கிய அறிவிப்பு வெளியாகும் என தகவல் வெளியானது. ஆனால் அதனை கமல்ஹாசன் மறுத்துவிட்டார்.

புதிய ஆப் அறிமுகம்

புதிய ஆப் அறிமுகம்

இந்நிலையில் வரும் நவம்பர் 5 ஆம் தேதி நடிகர் கமல்ஹாசன் ஒரு புதிய ஆப்பை அறிமுகம் செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த ஆப் நடிகர் கமல், அவரது நற்பணி இயக்கம் மற்றும் பொதுமக்களை இணைக்கும் வகையில் இருக்கும் என கூறப்படுகிறது.

5ஆம் தேதி அறிமுக விழா

5ஆம் தேதி அறிமுக விழா

இதற்கான அறிமுக விழா சென்னை கேளம்பாக்கத்தில் உள்ள செட்டிநாடு மருத்துவமனை வளாகத்தில் நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நவம்பர் 5ஆம் தேதி மதியம் 2 மணிக்கு நடைபெறும் இந்த விழாவில் பல்வேறு நலத்திட்ட உதவிகளும் வழங்கப்படும் என்றும் கூறப்படுகிறது.

அறிவிப்பு வெளியாகுமா?

அறிவிப்பு வெளியாகுமா?

மேலும் அன்றைய நாளே தனது அரசியல் கட்சி குறித்து நடிகர் கமல்ஹாசன் அறிவிப்பார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. இதனால் நவம்பர் 5ஆம் தேதி நடிகர் கமல்ஹாசன் பங்கேற்கும் விழா மிகுந்த எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

நிர்வாகிகள், மாணவர்கள் பங்கேற்பு

நிர்வாகிகள், மாணவர்கள் பங்கேற்பு

இந்த விழாவில் தமிழகம் மட்டுமல்லாமல் ஆந்திரா, கேரளா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த நற்பணி இயக்க நிர்வாகிகளும் பங்கேற்கவுள்ளனர். மேலும் ரசிகர்கள் மற்றும் மாணவர்கள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+