இவங்களே ஆரம்பிப்பாங்களாம்... இவங்களே என்ட் கார்டும் போட்டுக்குவாங்களாம்! #Tamilisai
சென்னை: மெர்சல் விஷயத்தில் பாஜக தலைவர்கள் அடிக்கும் ஸ்டன்ட்களும், லூட்டிகளும் அந்தக் கட்சியை செம காமெடியாக்கிவிட்டன.
மெர்சல் என்ற படம் வெளியானபோது பலர் படம் சரியில்லை என்றார்கள். இன்னும் பலர் சுமாரான படம், ஒரு முறை பார்க்கலாம் என்றார்கள். விஜய் ரசிகர்களே கூட, ஏன் இப்படி பழைய படங்களைக் காப்பியடிக்கிறார் அட்லீ என சலித்துக் கொண்டார்கள். எல்லாம் ஒரு நாள்தான். தீபாவளிக்கு மறுநாளிலிருந்துதான் மெர்சலுக்கு நிஜ தீபாவளி கொண்டாட்டம் ஆரம்பமானது.

தமிழிசை சௌந்தர்ராஜனும், எச் ராஜாவும், பொன் ராதாகிருஷ்ணனும் அடுத்தடுத்து மெர்சல் படத்துக்கு எதிராக உளறிக் கொட்ட, படத்துக்கு தேசிய அளவில் விளம்பரம் கிடைத்துவிட்டது. திரையிட்ட இடமெல்லாம் திருவிழா கூட்டமானது.
மெர்சல் சுமார் படமோ நல்ல படமோ... பாஜக லூசுத்தனமா எதிர்ப்பதால அது இனி நம்ம படம் என்ற உணர்வோடு, படத்துக்கு கூட்டம் கூட்டமாக போக ஆரம்பித்துவிட்டனர்.
இந்த ஆறு நாட்களாக மீடியாவில் பாஜக தலைவர்களைப் போல யார் தலையும் உருண்டிருக்காது. அப்படியும் திருந்தியதாகத் தெரியவில்லை. குறிப்பாக எச் ராஜா மிகவும் விஷமத்தனமான கருத்துக்களைச் சொல்லிக் கொண்டே இருக்கிறார். விஜய்க்கு மதச் சாயம் பூச ஜோசப் விஜய் என்கிறார். அவரது வாக்காளர் அடையாள அட்டையை பொது வெளியில் போடுகிறார்.
இவ்வளவும் நடந்த பிறகு, இப்போது தமிழிசை சௌந்தர்ராஜன் மெர்சல் பிரச்சினை நல்லபடியாக முடிந்துவிட்டது என என்ட் கார்டு போட்டுள்ளார்.
நல்லவிதமாக முடிந்தது என்றால் என்ன அர்த்தம்? இவர்கள் கோரியபடி ஜிஎஸ்டி, பணமதிப்பிழப்பு காட்சிகள் நீக்கப்பட்டு விட்டனவா? அல்லது வேறு வழியில் பேரம் படிந்துவிட்டதா? அல்லது மெர்சலுக்கு இலவச பப்ளிசிட்டி தருவதுதான் இந்த ஆறு நாள் அட்ராசிட்டிக்கு காரணமா?
எந்த அடிப்படையில் மெர்சல் பிரச்சினை நல்லபடியாக முடிந்தது? இணைய வெளியில் வீசப்பட்டுள்ள இந்தக் கேள்விகளுக்கு பதிலிருக்கிறதா தமிழிசையிடம்?
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications